குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்க தமிழக அரசு ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தமிழகத்தில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அறிவித்தபடி இதுவரை தமிழக அரசு அந்த திட்டத்தை செய்யப்படுத்தவில்லை என்று பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் பல்வேறாகத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க பொங்கல் பரிசு ரூ.1000! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்!!
இந்த சச்சரவுகளுக்கு மத்தியில் அமைச்சர்கள் அவ்வப்போது உரிமைத்தொகை திட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் தொடர்பாகப் பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இதுகுறித்து நேற்று அமைச்சர் பிடிஆர் போட்டுள்ள ட்வீட்டில், முதல்வரின் புரட்சிகரமான உரிமைத் தொகை திட்டத்தின் செயல்முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் EAC குழுவுடன் நேற்று நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது என்றும், போலிச் செய்திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக்கும் சமூகநீதி இலக்கில் இருந்து திசை திருப்ப முடியாது''என்றும் பதிவினைச் செய்திருந்தார்.
இதனால் விரைவில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. அதே சமயத்தில் விமர்சனங்களை சற்று ஆற போட அமைச்சர் முயற்சிக்கிறாரா என்றும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், உரிமை தொகை திட்டம் குறித்து முதல்வருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவுக்கு உதவுவதற்கு துணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேதியை முன்கூட்டியே அறிவிக்காமல் அதற்கான முன்னெடுப்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டு மகளிர் தினத்தன்று இந்த திட்டம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
பொங்கல் பரிசு ரூ.1000! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்!!
PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!
Share your comments