திமுகவினர் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று பாஜக சார்பில் இருந்து வழக்கு தொடங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது.
இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கட்சி ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, மத்திய அரசு என்ற சொல்லுக்கு பதிலாக, திமுகவினர் ஒன்றிய அரசு என்று சொல்வது தவறு, இந்திய இறையாண்மைக்கு முரணானது என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பினர்.
ஆனால், ஒன்றிய அரசு என்றச் சொல்லை பயன்படுத்தினால், மாநில அரசை ஊராட்சி அரசு என்று அழைக்கலாமா என்ற பல விவாதங்களும் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக போடப்பட்ட வழக்கை மதுரை உயர் நீதிமன்ற கிளையின் சட்ட அமர்வு விசாரித்தது.
எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்தக்கூடாது என்று அரசுக்கு அறிவுறுத்த முடியாது என்று நீதிமன்ற அமர்வு விளக்கமளித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியா என்கிற பாரதம் பல மாநிலங்கள் ஒன்றடங்கிய நாடாக இருக்கும் என்று தெளிவாக விளக்கியது. மாநிலங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில், இந்தியா இணையவில்லை என்றும் கூறியது.
இந்தியா கூட்டாட்சி முறையிலான நாடாக இருக்க முடிவு செய்தது என்பதை, அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு விளக்கமளிக்கிறது என்று பாஜகவினர் ஒன்றியம் என்ற வார்த்தைக்கு எதிராக தங்கள் வாதத்தை வைத்தனர்.
பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைதான் இந்த விவகாரத்தை முதலில் சமூக ஊடகங்களில் பதிவு செய்து கவனத்திற்கு கொண்டுவந்தார். மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தமிழக அரசு உபயோகிப்பது தவறு என்று அவர் கண்டித்தார்.
இதுமட்டுமல்லாமல்,2006-11 க்கு இடையில் அவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் கூட்டணியில் இருந்தபோதும், தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்தது. அப்போது இந்த சொல்லை பயன்படுத்தாத தமிழக அரசு, இப்போது இந்த சொல்லை ஏன் பயன்படுத்துகிறது என்று அவர் ஆட்சேபித்தார்.
மேலும் படிக்க:
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு! நிலவரம் என்ன?
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!
ரூ.100 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஸ்டாலின் உத்தரவு, கொரோனாவின் 3-வது அலை முன்னேற்பாடு:
Share your comments