1. மற்றவை

TNHRCE: மாதம் ரூ.35,000 சம்பளத்தில் அருமையான வேலை வாய்ப்பு!!

Poonguzhali R
Poonguzhali R
TNHRCE: Excellent job opportunity with salary of Rs.35,000 per month !!

இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (TNHRCE) பல்வேறு வேலை காலியிடங்களை தற்பொழுது அறிவித்து இருக்கிறது. இந்த பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26.12.2022 முதல் 20.01.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பணிகளுக்கான வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முறை போன்றவை பற்றி இதில் பார்க்கலாம்.

சம்பள விவரங்கள் :
நிர்வாக பொறியாளர் - ரூ. 35,000/-
உதவி செயற்பொறியாளர் - ரூ. 30,000/-
உதவி பொறியாளர் - ரூ. 25,000/-
தேர்வு முறை : நேர்காணல்

அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhrce.gov.in என்ற தளத்திற்குச் சென்று அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பினை முழுவதும் படிக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு தகுதி பெற்றவராக இருந்தால், விண்ணப்பத்தினை பதிவிறக்க செய்து, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது போல செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு : இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
பணியின் பெயர் : நிர்வாக பொறியாளர்
வேலை இடம் : சென்னை
தொடக்கத் தேதி : 26.12.2022
கடைசி தேதி : 20.01.2023
வயது வரம்பு : எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் - அதிகபட்சம் 65 வயது
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் இல்லை.

முழு தகவலுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அது சரியானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். பிறகு மறக்காமல் நிர்வாக பொறியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை எழுதவும். விண்ணப்ப படிவத்தை அனுப்ப ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119 உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க

சமையல் பொருட்களின் விலை அதிரடி உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

சிறுநீரகக் கற்களை கரைக்க இயற்கையான ஐந்து எளிய வழிகள்!

English Summary: TNHRCE: Excellent job opportunity with salary of Rs.35,000 per month !! Published on: 08 January 2023, 06:49 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.