மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் 34 சதவீத அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
38%
விரைவில் இதுதொடர்பாக மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். 1.07.2022 தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
90 லட்சம் பேர்
இதனால் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவார்கள்.
பண்டிகை காலம்
விரைவில் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசைக்கட்டிக்கொண்டு வர உள்ள நிலையில், அறிவிக்கப்பட உள்ள இந்த அகவிலைப்படி உயர்வை, மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!
Share your comments