தமிழகம் முழுவது நேற்றய தினம் நடைபெற்ற 35-வது சிறப்பு மெகா கோவிட்-19 தடுப்பூசி முகாமி, சுமார் 12.28 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் போன்ற முக்கிய இடங்களில் மொத்தமக 50, 000 சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றன. 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 10 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வழிக்காட்டுதலின் அடிப்படையில், 12-14 வயதுடையவர்களுக்குக் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 16-03-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இது வரை 19,76,537 பயனாளிகளுக்கு முதல்தவணை தடுப்பூசியும், 14,98193 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 15-17 வயதுடையவர்களுக்குக் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 30,50,267 பயனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 25,81,517 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. அதோடு, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 1-ஆம் நாள் அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அந்த தடுப்பூசி இதுவரை மொத்தமாக 70,41,453 பயனாளிகளூக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 12,28,993 பயனாளிகளுக்குக் கோவிட் தடுப்பூசிகல் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 78,337 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments