மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 ஆயிரம் கால்நடைக் கொட்டகைகளைக் (Cow and Goat Shelters) கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கால்நடை விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் மாநிலத்தின் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழகத்தின் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த கால்நடை விவசாயிகளுக்கு மொத்தம் 25 ஆயிரம் கால்நடை கொட்டகைகளைக் கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு (Rural Development and Panchayat Raj (RDPR ) எனப்படும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் மொத்தம் 431 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த 25 ஆயிரம் கொட்டகைகளில், 40 சதவீதம், மலைஜாதியினருக்கு (Scheduled Castes) ஒதுக்கப்படும்.
இதுகுறித்து ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து துறை இயக்குநர் கே.எஸ். பழனிசாமி கூறுகையில், கொட்டகைக் கட்டுவதற்கான செலவு முழுவதும் மத்திய அரசு ஏற்கும். இந்தத்திட்டம் கிராம பஞ்சாயத்துகள் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
இதில் 15 ஆயிரம் மாட்டுக் கொட்டகைகளும், 10 ஆயிரம் ஆட்டுக் கொட்டகைகளும் கட்டித்தரப்பட உள்ளது.2 மாடுகளைக் கொண்ட கொட்டகையாக இருப்பின் ரூ.1.35 லட்சமும், 5 மாடுகளுக்கு ரூ.2.12 லட்சமும் செலவிடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பால்உற்பத்தியாளர்கள் வரவேற்பு (Welcome to Dairy Producers)
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கப் பொதுச்செயலாளர் எம். ஜி.ராஜேந்திரன், இதன்மூலம் பால் உற்பத்தி வாயிலாக மட்டும் விவசாயிகள் ஒரு வாரத்திற்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்றார்.
மேலும் படிக்க...
MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளே வந்துவிட்டது எலக்ட்ரிக் டிராக்டர்- விலை ரூ.5.99 லட்சம்தான் !
Share your comments