டோஃபு பிடிக்கும் ஆனால் உள்ளூர் கடைகளில் எளிதாகக் கிடைக்கவில்லையா? இந்த மசூர் தால் டோஃபுவை வீட்டிலேயே செய்ய முயற்சிக்கவும். இது அதிகப் புரதம் மற்றும் வழக்கமான ஆடம்பரமான டோஃபுவுக்கு மாற்றாகும். அதன் மெல்லிய அமைப்பு மற்றும் பால் சுவையுடனும் இருக்கிறது. மசூர் தால் டோஃபு சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு ஆகிய இரண்டிலும் சோயா டோஃபுவைப் போலவே உள்ளது.
வீட்டில் டோஃபு செய்ய உங்களுக்கு ஒரு கப் மசூர் பருப்பு, சிறிது தண்ணீர் தேவை. அதே பன்னீர் சார்ந்த உணவுகளைச் சாப்பிடுவது உங்களுக்குச் சலிப்பாக இருந்தால், இந்த தனித்துவமான மசூர் தால் டோஃபு செய்முறையை முயற்சி செய்து மகிழுங்கள்.
முதலில், ஒரு கிண்ணத்தில் 1 கப் மசூர் பருப்பைச் சேர்க்கவும். அதைத் தண்ணீரில் நிரப்பவும். மெதுவாக அதை அலசவும். அதன் பின் தண்ணீரை வடிகட்டவும். பருப்பைச் சுத்தம் செய்ய இந்த படிநிலையைக் குறைந்தது 3-4 முறை செய்யவும். இப்போது அலசிய பருப்பை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் 1½ கப் கொதிக்கும் நீரில் நிரப்பவும். சுமார் 20 நிமிடங்கள் அது அப்படியே இருக்கட்டும்.
தண்ணீர் குளிர்ந்தவுடன், ஒரு பிளெண்டரில் தண்ணீருடன் பருப்பைச் சேர்க்கவும். இப்போது அதை கலக்கி ஒரு மென்மையான கலவையை உருவாக்கலாம். இதை அடுத்தடுத்து 15 வினாடிகள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் கலக்கவும். தேவைப்பட்டால், சுமார் ¼ கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு மென்மையான நிலைத்தன்மையைப் பெற மீண்டும் அதிக வேகத்தில் கலக்கலாம்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 1½ கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். கடாயில் பருப்பு கலவையைச் சேர்த்து ஒரு கலவையைச் சேர்த்து மிதமான தீயில் சுமார் 8-10 நிமிடங்கள் சமைக்கவும். அடியில் ஒட்டாமல் இருக்க இடையிடையே தொடர்ந்து கலக்கவும். சுமார் 8 நிமிடங்களுக்குப் பிறகு, கலவை கெட்டியாகிப் பளபளப்பாக மாறியிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். அதன் பின்னர் வெப்பத்தை அணைத்து, சுமார் ஒரு 10 நிமிடங்களுக்குக் குளிர்விக்க விடவும்.
இப்போது ஒரு கண்ணாடி கொள்கலனை எடுத்து அதில் கலவையை ஊற்றவும். அதை சமமாக பரப்பவும். அடுக்கின் தடிமன் குறைந்தது 1 அங்குலமாக இருக்க வேண்டும். இப்போது கொள்கலனை ஒரு மூடியால் மூடி, டோஃபுவை சுமார் 4-5 மணிநேரம் அல்லது ஒரு முழு இரவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
செட் ஆனதும், டோஃபுவை வெளியே எடுத்து, குறிப்பிட்ட அளவு துண்டுகளாக நறுக்கி, சமையலில் பயன்படுத்தவும். மீதமுள்ளவற்றை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் காற்று புகாதக் கொள்கலனில் சேமிக்கலாம். அது 4-5 நாட்களுக்கு எளிதாக இருக்கும். மசூர் தால் டோஃபுவை ஸ்டிர்-ஃப்ரையில் பயன்படுத்தலாம். சாலட்களில் சேர்க்கலாம். உறைகளில் அடைக்கலாம். பன்னீர் சார்ந்த உணவிலும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க
கோடைகால முடி பராமரிப்பு குறிப்புகள்!
12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை உயர்வு! ஓர் பார்வை
Share your comments