தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் பாலைவன பயிரான பேரீச்சை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் குறித்தான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: ஓய்வூதியர்களுக்குச் அடுத்த மகிழ்ச்சியான செய்தி! சூப்பர் வசதி!
ஈராக், சவுதி அரேபியா போன்ற பாலைவன நாடுகளில் விளையும் பேரீச்சை தருமபுரி மாவட்டத்தில் அரியகுளம், அரூர், காரிமங்கலம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TNEB: ஆகஸ்டுக்குள் 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
இதே போல் கிருஷ்ணாபுத்தைச் சேர்ந்த முன் நிஜாமுதீன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு அரபு நாடுகளிலிருந்து திசு வளர்ப்பு பேரீச்சை நாற்றுகளை வாங்கி வந்து அவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டு சொட்டு நீர் மூலம் சாகுபடி செய்து வருகின்றார்.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
அவை மூன்று ஆண்டுகள் கழித்துத் தரைமட்டத்திலிருந்து 2 அடி உயரத்தில் பேரீச்சை செடியில் கொத்து கொத்தாக பேரீச்சை காய்க்க துவங்கியிருக்கிறது. பிறகு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதம் அறுவடை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 வகையான பேரீட்சை சாகுபடி செய்துள்ளார். ஒரு மரத்தில், 200 முதல், 300 கிலோ வரை காய்த்துள்ளன. முதல் மகசூலில் எட்டு டன் வரை விளைந்துள்ளதால், இதனை உள்ளூர் வியபாரிகள் மற்றும் வெளியூர் வியபாரிகள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர்.
மேலும் படிக்க: 100 நாள் வேலைத் திட்டம்: 150 நாட்களாக மாற்றப்படுமா?
வெளி மார்கெட்டில் ஒரு கிலோ பேரீச்சை, 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. பாலைவனத்தில் வளரக்கூடிய பேரீச்சை சாகுபடியைத் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஆர்வமாக செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: IRCTC முன்பதிவில் புதிய மாற்றம்! இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
தருமபுரி மாவட்டத்தில், பேரீச்சை சாகுபடி செய்வதற்கு ஏற்றது போல், மண்வளம் உள்ளதால், தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து பேரீச்சை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம்! மத்திய அரசின் அருமையான திட்டம்!!
இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!
Share your comments