மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழுப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், விவசாயிகள் சார்பாக காப்பீட்டுக் கட்டணத் தொகையை காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்துவதற்காக,
மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. எனவே, நடப்பாண்டில், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சம்பா நெல் ஆகியவற்றுக்கு காப்பீடு செய்ய டிசம்பர் 15 வரை கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2. உரத் தேவையை பூர்த்தி செய்ய பல டன் யூரியா இறக்குமதி: அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை
தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், இரசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்வதற்காக 90,000 டன் யூரியா தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, குறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
3. கரும்பு விவசாயிகள் போராட்டம்
கரும்புக்கு உரிய விலை நிர்ணயம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசிடம் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவு எடுக்காமல் இழுத்தடித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து கரும்பு விவசாய சங்கத்தினர் பெங்களூரு சுதந்திர பூங்காவில் தலையில் கல்லை வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4. இணைமின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
ஆகியோர் தலைமையில் இணைமின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க: PM Kisan Update| ரூ.266 மானிய விலையில் யூரியா| ஆதார் மின் இணைப்பு பணிக்கு புதிய நடைமுறை அறிமுகம்| 5G
5. PMFBY திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களின் கணக்கெடுப்பு!
தடுக்க இயலாத இயற்கை அபாயங்களால் ஏற்படும் பயிர் இழப்புக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விரிவான காப்பீடு வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகள் ரூ.25,186 கோடி பிரிமியம் செலுத்தியுள்ளனர் என்றும், 2022, அக்டோபர் 31-ந் தேதி நிலவரப்படி ரூ.1,25,662 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
6. அதார் அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம்
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம் 7 டிசம்பர் 2022 அன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளதாவது: UIDAI இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் சார்பாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான சேவைகளை பெற்றிடவும் பயன்படுகிறது. இந்நிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன் பேரில் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். இதற்கு ஏதுவாக முகாம் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. நாளை பல பகுதிகளில் மின் தடை
திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி நகரின் பல பகுதிகளில் சனிக்கிழமை டிசம்பர் 3 மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இம் மின் தடை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு, 9498794987 கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
8. பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் மீன் பொருட்களின் மேம்பாடு” குறித்த தேசிய அளவிலான இணையதள கருத்தரங்கு
விடுதலை அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 29, 2022 அன்று “பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் மீன் பொருட்களின் மேம்பாடு” குறித்த தேசிய அளவிலான இணையதள கருத்தரங்கிற்கு மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அரசின் மீன்வளத்துறை செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் மீன் வளத்துறை சங்கங்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை அதிகாரிகள், மாநில வேளாண், கால்நடை மற்றும் மீன்வளத்துறை பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள், மீன்வளத்துறை ஆராய்ச்சி மையங்கள், மீன்வளத்துறை கூட்டுறுவு அதிகாரிகள் அறிவியலாளர்கள், மாணவர்கள், நாடு முழுவதிலும் உள்ள மீன்வளத்துறை தொடர்புடையவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
9. உச்சம் தொட்ட பருத்தியின் விலை! விவசாயிகள் மகிழ்ச்சி!!
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் கடந்த வாரத்தை விட 141 குவிண்டால் பருத்தி வரத்து அதிகரித்து 753.07 குவிண்டாலாக ஏலம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் ரூ.61.80 லட்சம் மதிப்புக்கு ஏல முறையில் விற்பனையாகியுள்ளது. என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10. CIIயின் உணவு மற்றும் வேளாண்மை சிறப்பு மையம் 2022 ஏற்பாடு
CIIயின் உணவு மற்றும் வேளாண்மை சிறப்பு மையம் 2022 ஆம் ஆண்டுக்கான அதன் வருடாந்திர முதன்மை நிகழ்வான தேசிய உணவு பதப்படுத்துதல் மாநாட்டை டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை, அன்று புது தில்லியில் உள்ள ஹோட்டல் தி லலித்தில், தினை மற்றும் தினை சார்ந்த தயாரிப்புகளை மையமாகக் கொண்டு, இந்நிகழ்வு நடைப்பெற்றது.
11. ஒருங்கிணைந்த பண்ணையம் செய்ய 70% மானியம்
பயிர் சாகுபடியுடன், கறவை, மாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. ஆதி, திராவிட, பழங்குடியின சிறு, குறு, விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகிதம் அதாவது ரூ.50000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000/- மொத்தம் ரூபாய் 70,000/- மானியமாக வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
12. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் தொடங்கப்போகும் மழை!
அந்தமான் கடல் பகுதியில் வரும் டிசம்பர் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதே நேரம் வருகிற 4 மற்றும் 5 ஆம் தேதியில், அந்தமான் கடன் பகுதிகள் மற்றும் அதனை தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Share your comments