1. விவசாய தகவல்கள்

ட்ரோன் மானியம்|புதிய கூட்டுறவு நிலையங்கள்|TNAU|FPO Call Center|HDFC|தங்கம் விலை|காய்கறி விலை|வானிலை

Poonguzhali R
Poonguzhali R
TNAU: Drone Subsidy|New Cooperative Stations|FPO Call Center|HDFC|Gold Price|Vegetable Price|Weather

விவசாயிகளுக்கு 40% மானியம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், இரண்டு நாட்கள் பத்திரிக்கையாளர்களான வேளாண் மாணவர்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம், ட்ரோன் இயக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம், அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு, உழவர் சந்தையில் 87.5 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை, டிஜிட்டல் பயிர்கணக்கெடுப்பைத் தொடங்க இந்திய வேளாண் மையம் திட்டம் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|மாடு வளர்ப்பு பயிற்சி|100 யூனிட் மின்சாரம்|புதிய மின் கட்டணம்|தங்கத்தின் விலை

1. விவசாயிகளுக்கு 40% மானியம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

காய்கறிகள் மற்றும் பழங்களை நுகர்வோரிகளிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு வாகனங்கள் வாங்க மானியம் பெற இன்றே கடைசிநாள் ஆகும். சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய 6 மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடுதோறும் வழங்கிட ஏதுவாக 'பார்ம் டூ ஹோம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

2. இரண்டு நாட்கள் பத்திரிக்கையாளர்களான வேளாண் மாணவர்கள்!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவர் மற்றும் முதுகலை மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை சார்பில் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பத்திரிக்கையாளர்கள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஊடகவியல் பயிற்சி நடைபெற்றது.

மேலும் படிக்க: Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு

3. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 1105 இடங்கள் உள்ளன. இதற்கு மாணவர்கள் இன்று முதல் ”ஸ்பாட் அட்மிஷன்” நடைபெறும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதிப் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் படிப்புக்கான கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் விவரங்களை www.tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

4. ட்ரோன் இயக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்!

எருமனூர் கிராமத்தில் வேளாண் மாணவர்கள், விவசாயிகளுக்கு ட்ரோன் இயக்க செயல் விளக்கம் அளித்துள்ளனர். பெரம்பலூர் ரோவர் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தில் தங்கி பணி அனுபவப் பயிற்சியினைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிராம விவசாயிகலுக்கு “ ட்ரோன்” மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சி விழா நடத்த அறிவிப்பு!

5. அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

திருச்செந்தூர் திருக்கோவில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மொத்தமாக 6 காலிப்பணி இடங்கள் உள்ளன. இதற்கு tiruchendurmurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6. உழவர் சந்தையில் 87.5 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை!

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர், தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி என 11 இடங்களில் உழவர் சந்தைகள் இருக்கின்றன. இந்த உழவர் சந்தைகளில் 1010 விவசாயிகள் தங்கள் காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இது 87 லட்சத்து 49 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனையானது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சி விழா நடத்த அறிவிப்பு!

7. டிஜிட்டல் பயிர்கணக்கெடுப்பைத் தொடங்க இந்திய வேளாண் மையம் திட்டம்!

இந்த ஆண்டின் காரிஃப் பருவத்தில் சுமார் 10 மாநிலங்களில் டிஜிட்டல் கணக்கெடுப்பைத் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் தானியங்கி செயல்முறை மூலம் விவசாய நிலங்களின் “புவி-குறி வரைபடங்கள்” மற்றும் ”தொலைநிலை உணர்திறன்” படங்களைப் பயன்படுத்திச் சேகரிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

8. விதை கிடைப்பதை அதிகரிக்க உதவும் புதிய கூட்டுறவு நிலையங்கள்!

விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைப்பதையும், அதனை மேம்படுத்துவதையும், கரிமப் பொருட்களின் தடயத்தை அதிகரிக்கவும் உதவும் வகையில் தேசிய அளவில் மூன்று கூட்டுறவு நிலையங்களை அமைப்பதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க: மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

9. விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் FPO Call Center இன்று கிரிஷி ஜாக்ரனில் தொடங்கப்பட்டது!

விவசாயிகளின் சந்தேகங்களையும், அதர்கான தீர்வுகளையும் வழங்கும் வகையிலான FPO Call Center இன்று தொடங்கப்பட்டது. விவசாயத்திற்கு என முதன் முதலில் தொடங்கப்படும் FPO Call Center இதுவே ஆகும். இதனை நாளை மாபெறும் விவசாயப் பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரன் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் விஜய லக்‌ஷிமி நந்தேந்லா தொடங்கி வைத்து உரையாற்றினார்.

10. HDFC வங்கியின் "Bank On Wheels": விருதுநகரில் இன்று தொடக்கம்!

HDFC வங்கி தனது அதிநவீன 'பேங்க் ஆன் வீல்ஸ்' வேன் வசதியை தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 10 முதல் 25 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு ஒவ்வொரு வாரமும் செல்லும். இது சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு முதலாக 21 வங்கி சேவைகளை வழங்குகிறது. குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது மாநிலமாக தமிழ்நாடில் இன்று இந்தச் சேவை தொடங்கப்படுகிறது.

11. தங்கம் விலை 250 ரூபாய்க்குமேல் உயர்ந்தது! இன்றை விலை நிலவரம்!

தங்கம் விலை சமீபக் காலமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றது. சவரன் 42 ஆயிரத்தைத் தாண்டியது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.250 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,323 க்கும், சவரன் ரூ.42,584 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: Ration Card: புதிய ரேஷன் கார்டு|நெல் கொள்முதல் நிலையங்கள்|FPO Call Center|பால்பண்ணைத் தொழில்|இ-சந்தை

12. இன்றைய காய்கறி விலை நிலவரம்

திண்டுக்கல் சந்தியில் விற்பனையாகின்ற நிலவரத்தின்படி,

கத்தரிக்காய்: ரூ. 60
சின்னவெங்காயம்: ரூ.70
பெரிய வெங்காயம்:ரூ.30
தக்காளி: ரூ.26
வெண்டை: ரூ.50
அவரை:ரூ.40
முள்ளங்கி:ரூ.20
கொத்தவரை:ரூ.24
உருளை: ரூ.30
கேரடி: ரூ.44
பீட்ரூட்: ரூ.40-க்கும் விற்பனையாகிவருகிறது.

13. இன்றைய வானிலை தகவல்

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

விவசாயிகள் கவனத்திற்கு: விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறும் வழி இதோ!

நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி: அதிகரிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

English Summary: Drone Subsidy|New Cooperative Stations|TNAU|FPO Call Center|HDFC|Gold Price|Vegetable Price|Weather Published on: 24 January 2023, 12:45 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.