பொதுவாக கோடை காலத்துல அதிகமாக வெப்பம் ( ஏப்ரல், மே) மாதங்களில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடரும் வெப்ப அலையில், தோட்டப்பயிர்களை பாதுகாப்பது எவ்வாறு என வேளாண் ஆலோசகர் சந்திர சேகரன் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
வெப்ப அலை என்பது இயல்பான வெப்ப நிலையை விடக்கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் தொடர்ந்து 3 தினங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் இருந்தால் அந்த நாட்களை வெப்ப அலை நாட்கள் என்கிறோம். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் சாரசரியாக 8 வெப்ப அலை எற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வெப்ப அலையில் விவசாயப் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மாடித்தோட்டபயிர்களை கீழ்கண்ட முறையில் பாதுகாக்கலாம்.
- மாடி தோட்டப்பயிர்களுக்கு தற்காலிக நிழற் பந்தல் ( GREEN NET) அமைத்து வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தடுக்கலாம்.
- நீர்ப்பாசனம் காலை/ மாலை நேரங்களில் அதுவும் சொட்டுநீர் பாசனம்/ தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தலாம். இதனால் நீரின் ஆவியாவதல் தடுக்கப்படுகிறது. இதன் மூலமாக நீரானது செடிகளின் வேரின் தொகுப்பிற்கு நேரடியாக நீர் செல்லுவதால் வெப்ப அலையால் ( ROOT ZONE) பாதிக்காது.
- வெப்ப அலை உள்ள காலங்களில் பயிர்களுக்கு செடிக்கு அடியில் உரம் இடக்கூடாது. அவ்வாறு இட்டால் கடுமையான வெப்பத்தால் போதுமான தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் பயிர்களின் திசு வளர்ச்சி பாதிக்கப்பட்டு பயிர் கருகிவிடும். இது போன்ற நேரங்களில் தேவைப்பட்டால் இலைவழி தெளிப்பாக உரமிடலாம்.
- தரையில்( நிலத்தில்) வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி வருவதை தடுக்க வைக்கோல் கூளம் போன்றவைகளைக் கொண்டு மூடாக்கு போட வேண்டும். இதனால் மண்ணின் ஈரம் ஆவியாவது தடுப்பதுடன் களைகள் முளைக்காது.
- வெப்ப அலையில் இருந்து தாவரங்களை பாதுகாக்க " மெத்தைலோ பாக்டீரியா"(PPFM) ஓரு லிட்டர் தண்ணீருக்கு.20மி.லி காலை/ மாலை நேரங்களில் தெளிக்கலாம். இதனால் 10% மகசூல் அதிகமாக கிடைப்பதுடன் வறட்சியிலிருந்து தப்பிக்கலாம்.
- வெப்ப அலை மற்றும் நீராவி போக்கினை கட்டுபடுத்த பயிர்களின் மீது 5% கயோலின் என்ற களி மண்ணை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் வெப்பத்தின் தாக்கம் குறையலாம்.
- தோட்ட வேலைகளை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மேற்கொள்ளலாம். களை எடுத்தல், பூ பறித்தல் போன்ற பணிகளை இந்த நேரங்களில் செய்யலாம்.
- கால்நடை மேய்ச்சலை காலை/மாலை நேரங்களில் மேய விடலாம். வெயில் நேரங்களில் வெளியே அனுப்பக்கூடாது.
இதுபோன்ற வெப்ப அலையில் பயிரை பாதுகாப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த மாதிரியான நேரத்துல புதிய பயிரை சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மாற்றுக்கருத்துகள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்புக்கு: 9443570289
மேலும் காண்க:
நீர்வளத்துறைக்கு முதல்வர் வழங்கிய DGPS கருவி- இதனால் இவ்வளவு பயனா?
காட்டு யானை குறித்த அறிக்கை- முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி
Share your comments