தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) சார்பில் வரும் 5ம் தேதி காளான் சாகுபடி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி காளான் வளர்ப்பு குறித்தப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.
நேரடி பயிற்சி (Training)
கொரோனா வைரஸ் தாக்கத்தினால், காளான் வளர்ப்பு நேர்முகப்பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காளான் சாகுபடி குறித்த நேரடி பயிற்சித்திட்டத்தை டிசம்பர் 5ம் தேதி முதல் மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. 5ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக துறைக்கு வந்து பயிற்சிக் கட்டணமாக ரூ.590யை (வரி, கட்டணம் உட்பட) செலுத்தி பயிற்சிக்கு பதிவு செய்து கொண்டு, பயிற்சித்திட்டத்தில் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் நோயியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி - 0422 -6611336
மின்னஞ்சல் : pathology@tnau.ac.in
மேலும் படிக்க...
தென் தமிழகக் கடலோரப் பகுதிகளை நெருங்குகிறது புரெவி புயல்! கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
TNAUவில் இளமறிவியல் பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை- கலந்தாய்வு நீட்டிப்பு
ICARன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டில் 25%- தமிழ்நாடு மாணவர்களே தேர்ந்தெடுப்பு!
Share your comments