PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit by : Theekathir

விவசாயிகள் காரீஃப் பயிர்களுக்கான விதைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal Bima Yojana) இணைந்து காரீஃப் பயிர்களுக்கான காப்பீட்டினை பெறுவதும் அவசியமாகும். இதில் எப்படி இணைவது என்ற முழு விவரங்களை தற்போது பார்கலாம்..

காப்பீட்டில் இணைய அழைப்பு  (call on insurance)

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் காஃரீப் பயிர்களுக்கான நடவுப் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்களின் பயிர்களை பாதுகாக்க பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு காரீஃப் பயிர்களுக்கான காப்பீடு தேதியை வெளியிட்டுள்ள மத்திய அரசு அதற்கான பணிகளும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கியுள்ளது.

கிசான் கிரெடிட் கார்டு (Kisan credit Card) மூலம் பயிர் கடன்களை எடுத்த விவசாயிகள், அவர்களின் பயிர் தானாகவே காப்பீட்டின் கீழ் வருகிறது. மற்ற விவசாயிகள் தங்கள் விருப்பப்படி பயிர் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயிர் கடன் இல்லாத விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கான காப்பீட்டை தனியாகவோ அல்லது பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal Bima Yojana) இணைந்தும் பெற்றுக்கொள்ளலாம், இதனை விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள சேவை மையங்களை அனுகி இணைந்துக்கொலள்ளாம்.

பிரதமரின் பயிர் காப்பீட்டு  (PM-crop Insurance)

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பினை இந்த திட்டம் ஈடு செய்கிறது. வானிலை மாறுபாடு போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதம் உள்ளிட்ட சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2016 ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான காரீஃப் பருவப் பயிர்களை (Kharif Crops) அடுத்த மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்கள் பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம் - https://pmfby.gov.in/. அல்லது விவசாயிகள் தங்களது அருகிலுள்ள வங்கிக்குச் சென்று இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ப்ரீமியம் (Premium)

ஒருவர் காரீஃப் பயிர்களுக்கு 2 சதவிகித ப்ரீமியத்தையும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகித ப்ரீமியத்தையும் செலுத்த வேண்டும்.

பிரதமரின் இத்திட்டம் தோட்டகலை பயிர்கள் மற்றும் வணிக பயிர்களுக்கும் காப்பீடு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் 5 சதவிகித ப்ரீமியத்தை செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள் (Documents)

  • பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட விவசாயிகளின் அடையாளச் சான்று.

  • காஸ்ரா எண் / வங்கி கணக்கு எண் நகல்

  • வயலில் பயிர் விதைத்ததற்கான ஆதாரம்

  • ரத்து செய்யப்பட்ட காசோலை

PMFBY-க்கு விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)

  • PMFBY இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் - https://pmfby.gov.in/

  • முகப்பு பக்கத்தில் உள்ள Farmers corner -யை கிளிக் செய்யவும்

  • இப்போது உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழைக, உங்களிடம் கணக்கு

  • இல்லையென்றால் Guest Farmer என்று கிளிக் செய்து உள்நுழைக

  • பெயர், முகவரி, வயது, நிலை போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்

  • இறுதியாக Submit பொத்தானைக் கிளிக் செய்க.

முக்கிய குறிப்பு (Important Note)

  • பயிர் விதைத்த 10 நாட்களுக்குள் காப்பீட்டுக் கொள்கையை எடுக்க வேண்டும்.

  • அறுவடை செய்வதற்கு 14 நாட்களுக்குள் ஏற்படும் இழப்புகளுக்கு மட்டும் காப்பீடு தொகை பெற முடியும்

  • இயற்கை பேரழிவு காரணமாக இழப்பு ஏற்பட்டால் மட்டுமே இந்த திட்டத்தில் மூலம் விவசாயிகள் பயன் பெற முடியும்

  • பயிர் இழப்பு ஏற்பட்டால், உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும்.

  • SBI , HDFC போன்ற வங்கியின் மூலமும் பிரதமரின் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணையலாம்.

மேலும் படிக்க:

PM-KMY: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36,000 கிடைக்கும்...இந்த திட்டம் தெரியுமா உங்களுக்கு!

PM-Kisan; திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்களா? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

PM Kisan Scheme : விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய மத்திய அரசு! உங்களுக்கு கிடைத்துவிட்டதா?

English Summary: how to join pradhan mantri fasal bima yojana online registration Published on: 24 June 2020, 05:09 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.