அதலைக்காய், சிறிய பாகற்காய் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் காய் வகையாகும், கரிசல் மண் நிறைந்த பகுதிகளில் அதிகமாக வளரும். ஊர் ஓரங்களிலும் தரிசு நிலங்களிலும் இது அதிகளவில் காணப்படும். இது வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது.
கசப்பு சுவை நிறைந்த இந்த அதலைக்காய், கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்தது. அதலைக்காயைப் பறித்த அன்றே சமைத்து சாப்பிடுவது சிறந்தது.
1. நீரிழிவு எதிர்ப்பு:
சர்க்கரை நோயாளிகள் அதலைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பை தடுக்கிறது.
2. நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கி:
அதலைக்காயில் உள்ள 'லெய்ச்சின்' மற்றும் 'வைட்டமின் சி' என்ற வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகளையும் அழிக்கக்கூடியது.
மேலும் படிக்க: தமிழகத்தில் தாண்டவம் ஆடும் டெங்கு- கட்டுப்படுத்த வழி என்ன?
3. மஞ்சள் காமாலையை தடுக்கிறது:
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதலைக்காயை பருப்புடன் கலந்து வேகவைத்து எண்ணெய் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே குணம் பெறலாம்.
4. இரத்த சோகையைத் தடுக்கிறது:
அதலைக்காய் கொக்கிப்புழுக்களை அழிக்க உதவுகிறது மற்றும் இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் இரும்பை உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. எனவே இரத்த சோகையை தடுக்க அதலைக்காய் பயன்படுகிறது.
மேலும் படிக்க: பார்ப்பதற்கு சின்ன பாகற்காய் போன்று இருக்கும், இந்த காய்கறி நன்மை என்ன தெரியுமா?
5. குடற்புழு நீக்கம்:
அதலைக்காய் சாறு கசப்புத்தன்மை கொண்டது. இந்த சாறு குடற்புழு நீக்க உதவுகிறது.
6. புற்றுநோயைத் தடுக்கிறது:
இது புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது. குறிப்பாக கணைய புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது.
7. எடை இழப்பு:
இதில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் இருப்பதால், மலச்சிக்கலைத் தடுக்கவும், எடை இழப்பைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது வயிற்றை நிரம்பச் செய்து, அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது.
8. எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டை இது தடுக்கும் திறன் கொண்டதாகும் இதை இளம்பெண்கள் வாரம் ஒருமுறை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்தல் பல நன்மைகளை விளைவிக்கும்.
மேலும் படிக்க
வாழை இலையில் ஒரு அல்வா ரெசிபி! எளியமுறையில் வீட்டில் செய்வது எப்படி?
Share your comments