1. வாழ்வும் நலமும்

தினமும் வாக்கிங் செல்கிரீற்களா? நீங்கள் செய்ய கூடாதவை என்னென்ன?

Poonguzhali R
Poonguzhali R
Do you go for a walk every day? What's not to do?

நடைபயிற்சி என்பது குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சியாகும். இதைச் செய்ய எளிதானது. மேலும், எந்த உபகரணமும் தேவையில்லை. மேலும் தொடர்ந்து செய்யும் போது மற்ற உடற்பயிற்சிகளைப் போலவே, அதே பலன் கிடைக்கும்.

வழக்கமான நடைப்பயணத்துடன் தொடர்புடைய பல நன்மைகள் உள்ளன. நடைப்பயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல்வேறு உடல்நலச் சிக்கல்களைத் தடுக்கிறது, இது எலும்புகளை வலுப்படுத்துகிறது, தசை சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துகிறது.

எண்ணற்ற நன்மைகள் இருந்தபோதிலும், நடைபயிற்சி பலருக்கு விரும்பிய முடிவுகளைத் தருவதில்லை. ஏன்? நடக்கும்போது நமக்கே தெரியாத தவறுகளைச் செய்வதே இதற்கு காரணம் ஆகும். அத்தகைய செய்ய கூடாதவைகளைக், கீழே பார்க்கலாம்.

​நடையின் வேகத்தை எது தடை செய்கிறது?

குழுவாக நடப்பது, நடக்கும்போது பாட்டு கேட்பது, மொபைல் ஃபோன் அப்ளிகேஷன்களில் உலாவுவது, யாரிடமாவது போனில் அல்லது நேரில் பேசுவது, வேகமாக நடக்காமல் இருப்பது, நடக்கும்போது அங்கும் இங்கும் பார்ப்பது போன்ற சில காரணங்கள் நம்மில் பலருக்கு இருக்கின்றன. இவற்றைத் தவிர்த்தால் நடைப்பயணத்தினால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

இது தவிர சரியான ஆடைகளை அணியாதது ஒரு தனிநபரின் நடை வேகத்தையும் பாதிக்கும். மிகவும் இறுக்கமான ஆடைகள் அல்லது மிகவும் தளர்வான ஆடைகளை அணிவது சரியாக நடக்க உதவாது. காலணிகள் நடைபயிற்சி வேகத்தை பெரிய அளவில் பாதிக்கலாம். சரியான காலணிகளை அணியாதது நடைப்பயிற்சியை மட்டும் பாதிக்காது, கால் எலும்புகள் மற்றும் தசைகளையும் பாதிக்கும்.

நீங்கள் படிகளின் எண்ணிக்கையை மட்டும் எண்ணுகிறீர்களா?

நீங்கள் படிகளின் எண்ணிக்கையை வெறுமனே எண்ணினால், அது பலன் அளிக்காது. நடப்பது என்பது வெறும் படிகளை எண்ணுவது அல்ல. நடைப்பயணத்தின் ஆரோக்கிய நன்மைகள் நீங்கள் எத்தனை கலோரிகளை எரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது ஆகும். இது உங்கள் நடையின் வேகத்தைப் பொறுத்தது ஆகும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒருவர் எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்கிறார் என்பதுதான் நடையின் வேகம். உதாரணமாக, ஒரு கிலோமீட்டருக்கு 9 நிமிட நடைப்பயிற்சி, ஒரு கிலோமீட்டருக்கு 10 முதல் 14 நிமிட நடை வேகத்தை விட அதிக கலோரிகளை எரிக்கும்.

நடக்கும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

தலையைக் குனிந்து கொண்டு நடக்கக் கூடாது. உங்கள் தலையை நேராக வைத்து, உங்கள் கழுத்து, முதுகு மற்றும் தோள்களை நேரான தோரணையில் பராமரிக்க வேண்டும். இதனால் நீங்கள் சரியாக சுவாசிக்க முடியும். நடக்கும்போது உங்கள் கைகளை செயலில் வைத்திருங்கள். அவற்றை இறுக்கமாக வைத்திருக்காதீர்கள் அல்லது காட்டுத்தனமாக விடாதீர்கள். உங்கள் உடலின் அதே வேகத்தில் உங்கள் கைகளை அசைக்கவும்.

இவை போன்ற சிறு சிறு செயல்களைத் தவிர்த்தால் நாம் எதற்காக நடைபயிற்சி செய்கிறோமோ அந்த பலனை எளிதில் பெறலாம்.

மேலும் படிக்க

30 நிமிடங்களில் 617 கலோரிகளை எரிக்க வேண்டுமா? இதைச் செய்யுங்கள்!

மாதம் ரூ. 5,000 போதும் 1 லட்சம் பென்சன் வாங்கலாம்!

English Summary: Do you go for a walk every day? What's not to do? Published on: 20 May 2022, 04:48 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.