கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து (Fat) குறைக்கப்படும். என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பல நன்மைகளை நமக்கு அள்ளித் தரும் கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
நன்மைகள்:
- கேரட்டை (Carrot) சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும். இதனால் இதய நோய்களை தடுக்க முடியும்.
- தினமும் ஒரு கப் அளவு கேரட் 3 வாரம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம். இதற்கு காரணம் அதில் உள்ள நார்ச்சத்து (Fiber) தான்.
- கேரட்டை வேக வைப்பதன் மூலம் அதன் கடினமான சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோட்டின் வெளிவருகிறது. கேரட்டை சமைக்கும் போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் அதன் மொத்த சத்தையும் உடல் நன்றாக எடுத்து கொள்ளும்.
- பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின் A-வாக மாறுகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குவதுடன் சரும பளபளப்புக்கும் உதவுகிறது.
- மாலைக்கண் நோய் வர பல காரணம் உண்டு. அதில் வைட்டமின் – ஏ குறைபாட்டால் இந்நோய் வந்தால் மட்டும் கேரட் அதை குணமாக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இயற்கையான கல் உப்பை பயன்படுத்துவோம்! உடல்நலம் காப்போம்!
காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments