உண்மையைச் சொன்னால், தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் நலன் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நாம் அடிக்கடி கவனிக்காமல் விடுகிறோம். நாம் எல்லா நேரத்திலும் அவர்களை புத்தகத்தை எடுத்து படித்து கொண்டே இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
ஆனால், பரபரப்பான படிப்பு நேரத்தின் மத்தியில், மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதும் மிக அவசியமாகும். படிக்கும்போது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது மட்டுமின்றி மூளையின் செயல்திறனையும் அதிகரிக்கிறது.
தேர்வுக் காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஏன் அவசியம்? : தேர்வுக் காலத்தில் மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அதுமட்டுமின்றி, கவலையும், அச்சமும் குடிகொண்டிருக்கும் மாணவர்களின் மத்தியில் கல்வி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுத் தவிர மாணவர்கள் ஸ்ட்ரெஸ் எடுத்து கொண்டால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படும், அதனால் அவரது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
படிக்கும் நேரம் நிதானமாக இருக்க வேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மன அழுத்தத்தின் போது சரியாக படிக்க முடியாது. மாணவர்கள் இரவில் படிக்கும் போது தூக்கம் வராமல் இருக்க துரித உணவு, ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால் அதனால் வரும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
துரித உணவைத் தவிர்க்கவும்: தேர்வுகளின் போது, மாணவர்களின் மூளை 24 மணி நேரமும், தூங்கும் நேரம் உட்பட செயலில் இருக்கிறது. அதாவது உங்கள் மூளைக்கு நிலையான ஆற்றல் தேவை என்பது குறிப்பிடதக்கது.
அது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து வருகிறது. இருப்பினும் காபி, இனிப்புகள், துரித உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது, அது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும்.
அத்துடன் நீரிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். இதன் விளைவாக, நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைகிறது மற்றும் உங்கள் கவனத்திறனும் பலவீனமடைகிறது.
என்ன உணவுகள் எடுக்க வேண்டும்: நட்ஸ் மற்றும் உலர் பழங்களை வாங்கி, சக்தி தேவைப்படும் போது சிறிது சிறிதாக சாப்பிடுங்கள். வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு, திராட்சை, பேரிக்காய் போன்றவை நல்ல ஆற்றலைத் தரும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் கால்சியம் முக்கியம். கேரட், வெள்ளரி, கேப்சிகம் போன்ற சத்துள்ள காய்கறிகளை சாப்பிடுங்கள். இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்த்து பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, தாது, வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழங்களை மலிவான விலையில் எடுத்துக் கொள்ளலாம்.
நீரேற்றம் தேவை: நிறைய தண்ணீர் அடிக்கடி குடிப்பது மிக அவசியம். அதே சமயம் காபி, செயற்கை இனிப்பு, கூல்டிரிங்க்ஸ் போன்றவற்றை தவிர்க்கவும். தேர்வு அறைக்குச் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். பின்னர் இடைவெளி விட்டு விடுங்கள். இதனால் தேர்வு நேரத்தின்போது சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படாது. இதற்கிடையில், தேர்வு அறையில் சிறிது தண்ணீர் குடிக்கலாம்.
மேலும் படிக்க:
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்
CBSE தேர்வு பற்றி 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் கால முடிவுகளை 2022 ஆண்டில் வெளியிடுமா
Share your comments