தென்மேற்கு பருவமழை தொடங்கி மழைக்கு வெலுத்து வாங்கிக்கொண்டியிருக்கிறது. இந்நேரத்தில் அசத்தலான ஒரு ஸ்னாக்ஸ் மழையை ரசித்துக்கொண்டு, ஜன்னல் ஓரமோ அல்லது பால்கனியிலோ உட்கார்ந்தால், என்ன சுகமாக இருக்கும். தமிழகத்தில் கடந்த 1 மணி நேரத்திற்குள் 10 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் கப் அளவு, ரவை மற்றும் அவல் வைத்து, சூப்பரான ஒரு ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை | 1 கப் |
அவில் | 1 கப் |
தண்ணீர் | தேவைக்கேற்ப |
துருவிய பூண்டு | 2/4 பல் |
எண்ணெய் | தேவைக்கேற்ப |
கடுகு | தேவைக்கேற்ப |
சீரகம் | தேவைக்கேற்ப |
உளுத்தம் பருப்பு | தேவைக்கேற்ப |
உளுத்தம் பருப்பு | தேவைக்கேற்ப |
செய்முறை:
- கப் அளவு அவல் எடுத்து, அதே அளவு தண்ணீரில் உரவைக்கவும்.
- உரிய அவலை நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
- அதன் பின்னர் அத்துடன் கப் அளவு ரவையை சேர்த்துக்கொள்ளவும். பின்பு உருண்டை பிடிக்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- பின்னர் சிறிது நேரம் கழித்து, அதில் சீரகம், உப்பு மற்றும் துருவிய பூண்டு சேர்த்து உருண்டை பிடித்துக்கொள்ளவும்.
- பின்னர், இந்த உருண்டைகளை இட்லி சட்டியின் உதவியுடன் அவித்து எடுத்துக்கொள்ளவும்.
- அதன் பின் ஒரு வானலியில், சிறிது எண்ணெய் சேர்த்து, அத்துடன் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்க்கவும்.
- சேர்த்த அனைத்தும் பொன்னிறம் வந்தவுடன், அவித்து வைத்திருக்கும் உருண்டைகளை, இதில் சேர்த்து, தேவைக்கேற்ப இட்லி பொடியை துவி விட்டு பரிமாறவும்.
சாஃப்டானா, ஹெல்தியான, ஃப்ளஃபியான மற்றும் டேஸ்டியானா அவல் உருண்டைகள் தயார். இதை சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க:
தமிழகம்: 10 மாவட்டங்களில் கொட்டும் மழை! வானிலை நிலவரம் என்ன?
தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் கொள்முதல் நிறுத்தம்...
Share your comments