பூண்டு நமது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது என்பது பலருக்குத் தெரியும். பூண்டுகளில் பல அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது நம் உடலை பல தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் பூண்டின் இன்னும் சில தெரியாத நன்மைகளும் இருக்கின்றன. இவற்றைப் பற்றி பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
தூங்குவதற்கு முன் பூண்டின் சில பற்களை தலையணையின் கீழ் வைத்தால் மிகவும் நன்மை பயக்கும். இதனால் என்னென்ன நமைகள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
கொசு விலகிச் செல்கின்றன
இரவில் தூங்கும் போது சில இடங்களில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. பூண்டை தலையணையின் கீழ் வைத்தால் நாம் எளிதாக கொசு கொசுக்களை விரட்ட முடியும். பூண்டில் இருக்கும் பல கூறுகள் கொசுக்கள் மற்றும் பல பூச்சிகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. ஆகையால் தலையணையின் கீழ் பூண்டை வைத்தால், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் அந்த வாசனையால் ஓடிவிடும்.
நல்ல துக்கத்துக்கு உதவும்
தலையணையின் கீழ் பூண்டை வைத்திருப்பது உடலில் உறக்கத்தைத் தூண்டும். பூண்டில் வைட்டமின் பி 1 இருக்கிறது. இது மனிதர்களுக்கு நல்ல தூக்கத்தை தருகிறது. இது தவிர, வைட்டமின் பி 6-ம் பூண்டில் அதிகளவில் காணப்படுகிறது. இது தூக்கமின்மையால் அவதுப்படுவோருக்கு அதிக நன்மை அளிக்கமுடியும். பொதுவாக மனிதர்களுக்கு ஒரு நாளில் 7 மணிநேர தூக்கம் அவசியம் தேவை என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை பல கடுமையான நோய்களுக்கும் மன உடல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், தலையணையின் கீழ் பூண்டு வைப்பதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தையும் நீங்கள் தவிர்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
தினமும் தலையணையின் கீழ் பூண்டு வைத்திருப்பது ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது. பூண்டில் அல்லிசின் எனப்படும் ஒரு கூறு உள்ளது. இது உடலை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியிலும் கண்டறியப்பட்டுள்ளது.
சளி இருமலை சரி குணப்படுத்துகிறது
மூக்கில் ஏற்படும் அடைப்பு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், இது கவனிக்கப்படாவிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் தலையணைக்கு கீழ் பூண்டு பற்களை வைத்து தூங்கினால், பூண்டில் உள்ள அல்லிசினின் காரணமாக, மூக்கில் எந்தவிதமான தொற்றும் ஏற்படாமல் இருக்கும். மூக்கில் உள்ள அடைப்பும் குணமாகும்.
மேலும் படிக்க:
Share your comments