உயிருக்கு ஆதாரமே உணவு. அந்த உணவுக்கு ஆதாரம் விவசாயம். காலம் போகிறப் போக்கில், நாம் அனைவருமே நமக்குத் தேவையான அரிசி, பருப்பு, தானியங்கள் மற்றும் காய்கறிகளை நாமே விளைவித்து சாப்பிடும் நிலையை நிச்சயம் எட்டிவிடும்.
ஏனெனில், லாபநோக்கில், சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் ரசாயனக் கொல்லிகளின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த உரங்கள், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக சேர்க்கப்படும் செயற்கை நிறம் உள்ளிட்டவை நாம் வாங்கும் காய்கறிகள், மற்றும் பருப்பு வகைகளில் நச்சுக்களாகத் தேங்கி நம் உடலுக்கு நஞ்சாக மாறித் தங்கிவிடுகின்றன. இவை புற்றுநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களை நமக்கு இலவச இணைப்பாகக் கொண்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக உடல் நலத்திற்கு உகந்தது எனக் கருதப்படும் கீரை வகைகளில், அதிகளவில் நச்சுக்கள் இருப்பதாக, கேரள பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே இந்த நச்சுக்களை லாவகமாக அகற்றி, நஞ்சில்லா உணவை நாம் உண்ண என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
பருப்பு வகைகள் (Legumes)
பருப்புவகைகளை தண்ணீர் விட்டு நன்கு கழுவவும். பிறகு 2 லிட்டர் தண்ணீர் மற்றும், 40 மில்லி லிட்டர் வினிகர்(Vinegar)அல்லது மஞ்சள் (40 கிராம்) கலந்த நீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் நல்ல தண்ணீரில் நன்கு அலசவும். பிறகு காட்டன் துணியால் துடைத்துவிட்டு, ஃபிரிட்ஜில் (fridge) வைக்கலாம்.
கீரைகள்(Leafy Vegetables)
மஞ்சள் மற்றும் தண்ணீர் கலவையில் சுமார் 15 நிமிடங்கள் கீரைகளை ஊறவைத்து கழுவவும். பின்னர் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
வெள்ளரிக்காய் (Cucumbers)
வெள்ளரிக்காய் மற்றும் பாகற்காய்களில் அதிகளவில் நச்சுக்கள் படிந்திருக்கும். எனவே இவற்றின் தோல்பகுதியை கத்தியைக் கொண்டு சுரண்டி எடுத்துவிட்டு, சுமார் 15 நிமிடங்கள் வினிகர் கலவையில் ஊறவைக்கவும். பின்னர் சுத்தமாக தண்ணீரில் கழுவி, ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பது நல்லது.
கிழங்கு வகைகள் (Tuber vegetables)
மரவள்ளிக்கிழங்கு ( tapioca,) சேனைக்கிழங்கு (elephant yam)ஆகியவற்றை சில தடவை நன்கு தண்ணீரில் கழுவவும். சமைப்பதற்கு முன்பாக, தோலை அப்புறப்படுத்தினால், நச்சுக்கள் முற்றிலும் நீக்கப்பட்டுவிடும்.
காய்கறிகள் (Vegetables)
குளிர்காலக்காய்கறிகள் என அழைக்கப்படும் முட்டைக்கோஸ் (Cabbage)காளிஃபிளவர் ( Cauliflower) ஆகியவற்றை தண்ணீரைக் கொண்டு பலமுறை கழுவி சுத்தம் செய்துவிட்டு, 15 நிமிடங்கள் வினிகர் கலந்த நீரில் கழுவவும்.
கேரட்(Carrots)பீட்ரூட், முள்ளங்கி ஆகியவற்றில் மிகக் குறைந்த அளவே நச்சுக்கள் தங்கியிருக்கும். எனவே இவற்றின் தோலை அகற்றிவிட்டு, தண்ணீரில் பலமுறை கழுவினாலே போதும். நச்சுக்கள் காணாமல் போய்விடும்.
மேலும் படிக்க...
இளங்கலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு தேதி - அறிவித்தது TNAU!
Share your comments