சின்ன வெங்காயத்தில் மருத்துவ குணங்கள் அதிகம். தேனில் ஊறவைத்த இந்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் ஏற்படும். அவை என்னவென்று இந்த குறிப்பில் பார்ப்போம். வெங்காயத்தில் சல்பர் உள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் பலம் பெறும் மற்றும் பருவகால தொற்று நோய்களைத் தவிர்க்கலாம்.
இரத்தத்தை சுத்தப்படுத்த:
ரத்தத்தை சுத்திகரிக்க சின்ன வெங்காயம் பயன்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? தேனில் ஊறவைத்த வெங்காயம் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்த ஓட்டம் சீராகும்.
அஜீரணத்தை போக்க:
சின்ன வெங்காயம் மற்றும் தேன் இரண்டிலும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது அஜீரணம் கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.
நச்சு நீக்கம்:
சின்ன வெங்காயம் மற்றும் தேன் இரண்டும் நச்சு நீக்கும் தன்மை கொண்டது. தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, ரத்தத்தில் உள்ள மற்ற கழிவுகளை வெளியேற்றி, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும்.
தூக்கக் கோளாறுகள்:
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் கேட்ஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, மாறிய வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறலாம்.
இவை அனைத்திலும் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை சின்ன வெங்காயம் தீர்க்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா, சளி, நுரையீரல் பிரச்சனைகளுக்கு சின்ன வெங்காயம் சிறந்த மருந்தாக உள்ளது.இந்தப் பிரச்சனைகள் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
மார்பு சளியை போக்க:
பொதுவாக சளி பிடித்தால் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வெந்நீர் குடிப்பது வழக்கம்.
சின்ன வெங்காயத்தை சாறு செய்து சம அளவு தேனில் கலந்து சாப்பிடுவது போன்றவற்றை நம் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வந்துள்ளனர். அதை பின்பற்றாமல் விட்டுவிட்டோம்.
நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் படுக்கும் முன் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
தொப்பையை குறைக்க:
இந்த தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.
குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கும்.
தேன் வெங்காயம் செய்வது எப்படி?
ஒரு சுத்தமான பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டிலில் எடுத்து கொள்ளவும்.
அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய (அப்போதுதான் தேனுடன் ஊறும்) சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டும்.
அதைத் கைபடாமல் இரண்டு நாட்கள் ஓரமாக வைக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். நீங்க போட்டதை விட கொஞ்சம் மெலிதாக இருந்திருக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் கலந்து ஊறியிருக்கும்.
இதை தினமும் காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும் படிக்க:
மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்
அறுவடை நேரத்தில் பதம்பார்த்த மழை- 25 ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காயம் பாழானது!
Share your comments