நெற்பயிரில் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என வேளாண் இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதிகாரி ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் மற்றும் நெல்லில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் விவசாயிகளிடம் பேசினார். அப்போது
மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை ஒரு லட்சம் ஹெக்டேரில் நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளன.
வேளாண் துறை மூலம் மெட்ரிக் டன், வேளாண்மை விரிவாக்க மையங்களில் 396 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன
மாவட்டத்தில் சுமார் 3.792 மெட்ரிக் டன் யூரியா இருப்பில் உள்ள நிலையில், தொடர்ந்து உரங்கள் வந்து கொண்டிருக் கின்றன. தற்போது சம்பா, தாளடி பயிர் நிலையை பொறுத்த வரை, நடவு முதல் 50 நாள்கள் வரையிலான வளர்ச்சிப் பருவத்தில் உள்ளன.
இதில், ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்களில் சில இடங் களில் தென்படுகின்றன. ஆனைக்கொம்பன் ஈ தாக்கிய வயல் களில், ஆனைக்கொம்பன் ஈயைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள், ஊன் உண்ணிகள் நிறைந்து காணப்படுகின்றன.
பூச்சிகள் தாக்காது
இதுபோன்ற சூழ்நிலையில் விவசாயிகள் பூச்சி மருந்து அளிப்பதை தவிர்த்து மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும். மேலும் யூரியாவை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்தால், எந்த பூச்சிகளும் நெற்பயிரை தாக்காது. நெற் பயிரில் 10 சதவீதம் அதாவது தூர்களில் 10 தூர் மற்றும் அதற்கு மேல் ஆனைக்கொம்பன் ஈயால் பாதிப்பு அடையும் போது மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
கேரட் உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி-அரசு சார்பில் கேரட் கழுவும் இயந்திரம்!!
FSSAI ஊழியராக விருப்பமா? நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
Share your comments