குறுகிய கால மலர் சாகுபடி உள்ளிட்ட வனவியல் தோட்ட தொழில்நுட்பம் தொடர்பாக வனத்துறை விஞ்ஞானிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வோண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
-
குறுகியக் கால மலர் சாகுபடி
-
தரமான மரக்கன்று வளர்ப்பு
-
பண்ணைக் காடுகளின் துல்லிய சாகுபடி
-
மர அறுவடை மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள்
வயது
வயது 18 வயது நிறைவு/ உச்சபட்ச வரம்பு கிடையாது
கல்வித்தகுதி
10 வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி
பயிற்சி முறை
நேரடி அல்லது இணைய வழி
பயிற்சிக் கட்டணம்
ரூ.2,500
பயிற்சி காலம்
மாதத்தில் ஒருநாள் வீதம் 6 மாதங்கள் பயிற்சி
சான்றிதழ்
வனவியல் விஞ்ஞானிகள் மற்றும் வகுப்புகள் நடத்தப்படுவதுடன் களப்பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி நிறைவடைந்ததும், சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
முனைவர் அ. பாலசுப்ரமணியம்
பேராசிரியர் மற்றும் தலைவர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மேட்டுப்பாளையம் - 641 301
மேலும் விபரங்களுக்கு 9443505845/9865303506 என்ற அலைபேசி எண்களிலும், silvifcri@tnau.ac.in என்ற மின்னஞ்சலிலும்,
www.tnau.ac.in என்ற இணையதளம் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
ஆடியில் விதைக்கத்தவறிவிட்டதா? கவலைவேண்டாம், சாமை விதித்து லாபம் ஈட்டலாம் வாருங்கள்!
Share your comments