மாடித் தோட்டத்தில் இருந்து வீட்டின் முன் புறம், பின் புறம் தோட்டம் வைத்திருபவர்கள் வரை ரோஜா செடி வைத்திருப்பது வழக்கமாகும். மற்ற செடிகளை விட ரோஜா செடியில் பூ பூத்ததா என பார்ப்பதற்கு, அதிகம் ஆசையும் கொண்டுள்ளனர். அந்த வகையில், சில பூ மொட்டுலையோ அல்லது பூத்த பிறகோ வாடிவிடுகின்றன. எனவே இதற்கான சரியான டிப்ஸை, இந்த பதிவில் பார்க்கலாம்.
ரோஜா செடி சிறப்பாக வளர டிப்ஸ்:
1. நமது ஊர் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை பொறுத்து குறைந்த அளவு தண்ணீரை தேவையான இடைவெளியில் மட்டும் கொடுக்கலாம், தொடர்ந்து தினசரி தண்ணீர் தருவதை தவிர்க்கவும்.
2. மக்கிய தொழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம் அல்லது ஊட்டமேற்றிய மண்புழு உரத்தை வாரமோ, மாதமோ ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து விரல்களில் அள்ளும் அளவு அல்லது ஒரு கைப்பிடி அளவிற்கு பைகளில் தூளாக்கி தூவி விடலாம், இதனால் செடி ஊட்டச்சத்து பெறும்.
3. தினசரி சமையலறைக் கழிவுகளில் முக்கியமாக முட்டை ஓடு நன்கு தூளாக்கி 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு தொட்டிக்கு 3 முட்டை முதல் 4 முட்டை ஓடுகளை தூவலாம்.
4. சுத்தப்படுத்தப்பட்ட வெங்காயத்தாள் பூண்டு தோல் போன்றவற்றை தொட்டி அல்லது செடி பைகளில் இருக்கும் மண்ணுடன் கலந்து விடுவது நல்லது. 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
5. இஎம் கரைசல் அல்லது பழ இ. எம் கரைசல் அல்லது பஞ்சகாவிய அல்லது தேமோர் கரைசல் அல்லது அரப்பு மோர் கரைசல் போன்ற திரவங்களை தொடர்ச்சியாக ஒரு லிட்டருக்கு 25 மில்லி என்ற கணக்கில் கலந்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை உள்ள இடைவெளியில் தெளித்து வருவது நல்லது.
பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?
6. ரோஜா செடியில் சம்பந்தமில்லாமல், ஒற்றைக் கொம்பு ஒன்று வளரும், அந்த குச்சியை நீக்கிவிடுவது சிறப்பு.
7. ரோஜா செடியில் வளரும் தேவையற்ற குச்சிகள் மற்றும் காய்ந்த கிளைகளை அல்லது இடமில்லாத கிளைகளை வெட்டி விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடம் ஒரு முறை, இதை சரிபார்ப்பது, மலர் சாகுபடியில் அதிக பலன் தரும்.
8. தாவரங்களுக்கு நுண்ணூட்டச்சத்து கொடுப்பதற்காக முருங்கை இலை சாறு தெளிப்பது நிலக்கடலை சாரி தெளிப்பது போன்றவை நல்ல பலன் தரும்.
9. ஹியூமிக் அமிலம் மற்றும் கடல்பாசி உரத்தை பயன்படுத்துவதும் நல்லது.
10. மாதம் ஒருமுறை ஒரு தொட்டிக்கு 5 மில்லி சூடோமோனஸ் என்ற திரவத்தை பாசன நீருடன் கலந்து வேர்ப்பகுதியில் ஊட்டலாம்.
11. பயிர்களில் வரும் மக்னீசியம் சத்து குறைபாடு தீர்க்க பஞ்சகாவியா தெளிப்பது அல்லது இருக்கு கரைசல் தெளிப்பது போன்றவை நல்ல தீர்வாகும்.
காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?
12. காய்ந்த இலை தழைகளை நன்கு தூளாக்கி அதனை மூடாக்காக செடிகளை சுற்றி மண்ணில் போட்டு விடுவது நல்லது.
13. 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது தேவையைப் பொறுத்து இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கலந்து இலைகளின் முன்னும் பின்னும் படுமாறு மாலை வேளையில் தெளித்து விடுவது நல்லது.
14. பொதுவாக அடுப்பு சாம்பல் அல்லது செங்கல் சூளை சாம்பல் கிடைத்தால், மாதம் ஒருமுறை ஐந்து விரல்களில் அள்ளும் அளவு அல்லது 20 கிராம் அளவுள்ள சாம்பலை கைகளின் மேல் பாசனத்துடன் தூவி விடலாம், இந்த டிப்ஸூம் நல்ல பயன் தரும்.
15. ரோஜா மலர் சாகுபடியின் இலக்கு அந்த ரகத்திற்கு ஏற்ற பூக்களின் அகலம் கிடைப்பதும், அதிக இதழ்கள் கொண்ட திடமான தன்மையுள்ள நல்ல நறுமணமும் ஆகும்.
தோல் பிரச்சனைகளை தீர்க்க உதவும் விலாமிச்சை வேர்!
இந்த டிப்ஸ் ரோஜா செடிக்கு அதிகம் நன்மை பயக்கும் என்றாலும், சமையலறை குப்பைகளை உபயோகித்தல், முட்டை ஒட்டுகளை தூளாக்கி செடிகளில் சேர்த்தல் போன்ற டிப்ஸ், அனைத்து செடிகளும் பயன்படும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
TNPSC: குரூப்- 2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கவும்
Share your comments