1. செய்திகள்

ஊட்டியில் பூத்துக்குலுங்கும் 325 வகையான மலர்கள்! 19ஆம் தேதி மலர் கண்காட்சி!

Poonguzhali R
Poonguzhali R
325 types of flowers blooming in Ooty! Flower exhibition on the 19th!

கடந்த 2022ஆம் ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ஊட்டி மலர் கண்காட்சியினைக் கண்டு ரசித்தனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13ஆம் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்க இருக்கிறது.

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடை விழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கி இருக்கிறது. டன் கணக்கில் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திருந்தன.

கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகின்ற 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் முக்கிய சிறப்பம்சமாக ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, டெய்ஸி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக ஆர்னமென் டல்கேல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள், பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், ட்யுப்ரஸ், பிகோனியா, பலவகையான கிரைசாந்திமம், ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தூரியம் முதலான 325 வகையான மலர்கள் இடம் பெற இருக்கின்றன.

325 வகையான மலர்கள் அனைத்தும் 35 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. அதோடு, பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலர் நாற்றுகளும மலர்ந்து அழகுடன் காட்சி அளிக்கிறது. மலர் காட்சி திடலில் வண்ணமயமான மலர் தொட்டிகள் ஒருங்கே அடுக்கி வைக்கும் பணி நேற்று சிறப்புடன் நடைபெற்றது. இதில் தமிழகச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த பணியைத் தொடங்கி வைத்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியினைக் கண்டு ரசித்த நிலையில் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது. ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்க இருக்கிறது.

இந்த மலர் கண்காட்சி பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தைச் சுற்றி பார்க்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவானது நாளை மறுநாள் தொடங்குகிறது. கூடலூரில் விளையும் வாசனை திரவியங்களைக் காட்சிப்படுத்தும் விதமாகத் தமிழகத் தோட்டக்கலைத்துறை சாா்பாக வாசனை திரவியக் கண்காட்சி நடத்தப்படும். இந்த கண்காட்சி நாளை முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்க இருக்கின்றது.

மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் மேடையின் அரங்குகள் அமைக்கும் பணி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினா் செய்கின்றனர். தொடர்ந்து நடைபெற இருக்கின்ற கண்காட்சிகள் நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

அலைமோதும் சுற்றுலா பயணிகள்! மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

அதிரடி ஆஃபரில் 50MP கேமரா உள்ள Samsung Phone!

English Summary: 325 types of flowers blooming in Ooty! Flower exhibition on the 19th! Published on: 11 May 2023, 04:33 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.