தமிழக போலீசாரின் குறைகளை களைய ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்கப்பட வேண்டும், போலீசாருக்கு 8 மணி நேர பணி முறையை விரைவில் பின்பற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
8 மணி நேர வேலை
போலீசார் பணிச்சுமை தொடர்பாக மாசிலாமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் புகழேந்தி, கிருபாகரன் (ஓய்வு) ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு;
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக போலீசார் , மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி மகத்தானது. இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது.
3 மாதத்தில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த குழுவில் மன நல நிபுணர்கள், உளவியலாளர் , சமூக ஆர்வலர், போலீசார், வழக்கறிஞர் இடம்பெற வேண்டும்.
போலீசாருக்கு 8 மணி நேர வேலை முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
3 ஷிப்டுகளில் போலீசாரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
கூடுதல் ஊதியம்
- போலீசாருக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கிட அரசு பரிசீலிக்க வேண்டும்.
- போலீஸ் துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்,
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க
மதுரையில் மழைப்பொழிவு குறையும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
Share your comments