உணவுபொருட்களின் விலை, எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. வாழைப்பழம் விலை ஒரு டசன், அதாவது 12 பழங்கள் 500 ரூபாய் என்ற விலையிலும், திராட்சைப் பழத்தின் விலைரூ.1600-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
நாட்டில் இதுவரை காணாத அளவு அதிகரித்து இருக்கின்ற பணவீக்கம் மக்களின் வாழ்க்கையைத் திருப்பி இருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமமாகிப் போன நிலையில் இருக்கிறது. அதாவது, பாகிஸ்தானில், உணவுபொருட்களின் விலை, எட்டாக்கனியாக மாறி இருக்கிறது.
மேலும் படிக்க: TNPSC-இல் புதிய மாற்றங்கள்! அமைச்சர் அறிவிப்பு!
வாழைப்பழம் விலை ஒரு டசன், அதாவது 12 பழங்கள் 500 ரூபாய் என்ற விலையிலும், திராட்சைப் பழத்தின் விலை ரூ.1600-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மக்களின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமையல் பொருள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விலைகள் உச்சத்தைத் எட்டியுள்ளது. வெங்காயத்தின் விலை 228.28 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மாவின் விலையும் 120.66 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
அதிலும் தற்பொழுது, ரம்ஜான் மாதத்தைக் கொண்டாடும், இஸ்லாமிய நாட்டில், ரமலான் நோன்பு வைக்கும் மக்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் உச்சகட்ட விலைகளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஒரு வாழைப்பழம் விலை ஒரு டசன், அதாவது 12 பழங்கள் 500 ரூபாய் என்ற விலையிலும், திராட்சைப் பழத்தின் விலைரூ.1600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
அன்றாட வாழ்வில் பயன்படும் அனைத்தும் விலை உயர்ந்து வருகின்றதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடினமாகி வருகின்றது. வெங்காயத்தின் விலை 228.28 சதவீதம் அளவில் அதிகரித்துள்ளது. மாவின் விலை 120.66 வீதத்தால் அதிகரித்து இருக்கிறது. தற்பொழுது, பாகிஸ்தானில் பெட்ரோல் 102.84 சதவீதமும், 81.17 சதவீதமும் என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மக்களே நற்செய்தி! சரிந்தது தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
MGNREGS வருகை பதிவேட்டில் சிக்கல்! தொழிலாளர்கள் வருத்தம்!
Share your comments