திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம், 100 சதவீத மானியத்தில், அதாவத விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகளை ஊராட்சிகளைச் சேர்ந்த 5,600 ஏழைப்பெண்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியத்திற்கு 5600 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
-
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் கிராமப்புற ஏழைப் பெண்களாகவும், கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
-
பயன்பெற விரும்புவோர், முந்தைய நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளாக இருத்தல் கூடாது.
-
விதவைகள், ஆதரவற்றோர், மற்றும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
-
கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர், கட்டாயமாக ஆதிதிராவிடர்,பழங்குடியினர் இனத்தை சோர்ந்தவர்களாகத் தேர்வு செய்யப்படுவர்.
-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
-
இத்தகுதிகளை கொண்ட பயனாளிகள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தின், கால்நடை உதவி மருத்துவரை அணுகி 28.09.2020-க்குள் விண்ணப்பிக்கலாம்.
-
இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
Share your comments