உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: தக்காளி, வெங்காயம் விலை ஏற்ற விவகாரம்! வரப்போகிறதா நடமாடும் காய்கறி கடை!!
மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு முதலானவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசின் கையிருப்பில் இருந்து உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் எனவும் கடிதத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றது. காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ள இந்த நிலையில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. விலை உயர்வினைக் கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் மளிகை பொருட்கள் விலை இன்றளவும் குறையவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும்.
வட மாநிலங்களில் பெய்து வருகின்ற மழை காரணமாகக் காய்கறி-மளிகை பொருட்கள் போதிய அளவு வராததால் விலை உயர்ந்து விட்டதாகக் கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் பியூஸ் கோயலுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாதம் ஒன்றுக்குத் தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு முதலானவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசின் கையிருப்பில் இருந்து உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது, அதோடு, இந்தப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும் எனவும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Tamil Scheme: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் கற்க புதிய திட்டம்!
பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்! நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!
Share your comments