50% மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள், பயிர்காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்கும் மத்திய அரசு, வேளாண்மை உழவர் நலத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம்: கலந்துகொண்டார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ”பெண்கள் பாதுகாப்பு மற்றும் நமது கலாச்சாரம்” என்ற விழிப்புணர்வு கண்காட்சி- தொடங்கி வைத்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதிய மின்னுற்பத்தி நிலையம் திறப்பு: திறந்து வைத்தனர் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் வி. செந்தில் பாலாஜி, மல்லிகைப் பூக்களின் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
50% மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்!
பாரம்பரியம் மிக்க மரபுசார் நெல் ரகங்கள் 50% மானியத்தில் விற்பனை செய்யபப்படும் என்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய விதை நெல்லான கருப்புக்கவுணி மற்றும் தூயமல்லி ரகங்கள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது. இந்த விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் இதனையும் 50 சதவீத மானிய விலையில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்கும் மத்திய அரசு!
மத்திய அரசு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இயற்கை சீற்றங்களால் பயிர் சேதம் மற்றும் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பது இதன் நோக்கம். இதன்படி பருவம் மற்றும் பயிர்களுக்கு ஏற்ப விவசாயிகள் பிரீமியம் தொகையில் அதிகபட்சம் 5 சதவீதத்தை செலுத்த வேண்டும். மீதித் தொகையை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து அளிக்கின்றன. இந்நிலையில், அதிகமான காப்பீடு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் பிரீமியம் தொகையை குறைக்கவும் மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய மந்திரிசபை ஒப்புதலுக்கு பிறகு 2023- 2024 ஆம் ஆண்டிலிருந்து புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது.
வேளாண்மை உழவர் நலத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம்: கலந்துகொண்டார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கள்ளக்குறிச்சியில் வேளாண்மை குறித்த திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அதோடு அப்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டிடங்களைத் திறந்து வைத்துப் பயனாளீகளுக்கு துறைசார்பாகப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஏ.வ. வேலு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
”பெண்கள் பாதுகாப்பு மற்றும் நமது கலாச்சாரம்” என்ற விழிப்புணர்வு கண்காட்சி- தொடங்கி வைத்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்ப்பு மற்றும் நமது கலாச்சாரம் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதற்கு வருகை தந்த தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடையே பல்வேறு கருத்துக்களை உரையாடினார். சுமார் 75 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர். தங்களின் திறமைகளையும், படைப்புகளையும் காட்சிப்படுத்தினர்.
புதிய மின்னுற்பத்தி நிலையம் திறப்பு: திறந்து வைத்தனர் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் வி. செந்தில் பாலாஜி
கருர் மாவட்டம் வெள்ளியணையில் ரூ. 450 கோடி செலவில் EVERRENEW ENERGY PRIVATE LIMITED மற்றும் 50 MW காற்றலை மின்னுற்பத்தி நிலையத்தை துவக்கி வைக்கப்பட்டது. இவற்றை தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த மின்னுற்பத்தி நிலையம் ஆண்டுக்கு 150 மில்லியன் யூனிட் வரை மின்னுற்பத்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, கரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகவும், சீரான மின் விநியோகம் கிடைக்கவும் இது வழிவகை செய்யும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
ஆவின் பொருட்கள் விற்பனை சரிவு!
இனி ரேஷன் கடையிலேயே சிலிண்டர் வாங்கலாம்: அரசின் புதிய அறிவிப்பு!
Share your comments