1. செய்திகள்

3ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Chance of rain in the districts adjoining the Western Ghats till the 3rd!

Credit : Times of India

வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்ளுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் 1.5கிலோமீட்டர் உயரம் வரையிலான வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், விதர்பா முதல் தென் தமிழகம் வரை 1 கிலோமீட்டர் உயரத்திலான வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

29.04.21

மழைக்கு வாய்ப்பு (Chance of rain)

இவ்விரு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை,கரூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை (Dry weather)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

30.04.21 முதல் 2.05.21 வரை

  • மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

03.05.21

  • மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு (Temperature forecast)

  • தமிழக உள் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்து வரும் 3 நாட்களுக்கு இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

  • கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதுல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கவும் வாய்ப்பு உள்ளது.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

அதிகமாக வியர்க்கும் (Excessive sweating)

  • காற்றின் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்பதால், மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கவும் செய்யும்.

  • தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

ஆடைகள் (Dress)

வெள்ளை மற்றும் வெளிறிய வண்ணம் கொண்ட (Light colour) கதர் அடைகளை அணிவது சிறந்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!

கோடையில் உடல் நலம் காக்கும் கீரைகள்! ஆர்வத்துடன் உழைக்கும் விவசாயிகள்

தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி நோய்! விவசாயிகள் கவலை!

English Summary: Chance of rain in the districts adjoining the Western Ghats till the 3rd!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.