தேசிய பென்சன் திட்டம் (NPS) முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்டது. பிற்காலத்தில் தனியார் ஊழியர்களும் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. தேசிய பென்சன் திட்டத்தை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகிறது.
தேசிய பென்சன் திட்டம் (National Pension Scheme)
தேசிய பென்சன் திட்டத்தில் ஒரு நபர் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், அவர் பணிஓய்வு பெறும்போது, தனது பென்சன் நிதியில் உள்ள பணத்தில் 60% வரை எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகையில் ஆண்டுத்தொகை வாங்கி பென்சன் பெறலாம்.
இந்நிலையில், இந்த பென்சன் நிதியை எடுப்பதற்கான விதிமுறைகளை PFRDA திருத்தியுள்ளது. அதாவது, பென்சன் நிதியை எடுப்பதற்கான கால வரம்பை குறைத்துள்ளது PFRDA. இதுவரையில், பென்சன் நிதியில் உள்ள பணத்தை எடுப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், அந்த கோரிக்கை 4 நாட்களில் செயல்படுத்தப்படும்.
இந்நிலையில், இந்த விதிமுறையை PFRDA மாற்றியுள்ளது. புதிய விதிமுறைப்படி, இனி தேசிய பென்சன் திட்ட கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், அந்த கோரிக்கை 2 நாட்களில் செயல்படுத்தப்படும் என PFRDA தெரிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தேசிய பென்சன் திட்ட பயனாளிகள் பயன்பெறுவார்கள். விரைவாக பணம் கிடைப்பது மட்டுமல்லாமல் நேர விரயத்தை தவிர்க்க முடியும்.
மேலும் படிக்க
Share your comments