1. செய்திகள்

சென்னை: 100 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Chennai: 100 electric buses will be operational soon

சென்னை மாநகரில் இயக்குவதற்கு 100 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில், சென்னை மாநகரில் புதிதாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன், பேருந்துகள் தொடர்பான இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரை போக்குவரத்துத் துறை சார்பில் நடத்தப்படும், சாலை போக்குவரத்து நிறுவனம் கோரியுள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு சார்ஜ் வசதியுடன் இணைந்து பேருந்துகளை வழங்கக்கூடிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஐஆர்டி(IRT) ஏலம் கோரியுள்ளது.

டெண்டர் ஆவணங்களின்படி, இந்த பஸ்கள் அனைத்தும் சக்கர நாற்காலியில் செல்லும் பயணிகளுக்கு ஒன்று உள்பட 36 பேர் இருக்கை வசதியுடன் கூடிய ஏசி பஸ்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏலதாரர்கள் தரையின் உயரத்தை 400 மில்லி மீட்டருக்கும் குறைவாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் பயணிகள் எளிதாக பேருந்துகளில் ஏறி இறங்கலாம். சக்கர நாற்காலியுடன் பயணிப்போரின் வசதிக்காக அதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கான Nokia 4G Smartphone: ரூ. 549 வாங்கலாம்!

இதுகுறித்து போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகையில், ‘டெல்லி, மும்பை மற்றும் புனேவை தொடர்ந்து மின்சார பஸ்களை இயக்கும் பெருநகரங்களில் சென்னையும் இணையும் எனக் குறிப்பிட்டனர். மாநில அரசு இந்த செயல்முறையை, மேலும் தாமதப்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினர்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர், ‘சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு மேலும் 400 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான முன்னோட்டமாக தற்போதைய கொள்முதல் அமையும் என்றார். மேலும் அவர், ஆரம்ப செயல்பாட்டு வெளியீட்டின் வெற்றியின் அடிப்படையில் மொத்த கொள்முதல் 2024க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பதிவை தொடரவும்.

மேலும் படிக்க: முட்டை விலை அதிரடி உயர்வு! மக்கள் அவதி!!

சார்ஜிங் உள்கட்டமைப்பை பொறுத்தவரை ஒரே இரவில் முழுவதும் சார்ஜ் செய்தல் அல்லது ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் 10-30 நிமிடங்கள் சார்ஜ் செய்தல் என்ற இரண்டு மாடல்களில் எதை தேர்வு செய்வது என இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர். ஏல மதிப்பீட்டிற்கு பின் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

Anti Aging: சரும சுருக்கங்களை போக்க, இந்த பழச்சாறுகள் போதும்

இனி அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்!

English Summary: Chennai: 100 electric buses will be operational soon Published on: 25 June 2022, 04:33 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.