விவசாயமே நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றது. அந்த நிலையில் விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல திட்டங்களையும், ஊக்கங்களையும் தந்து வருகின்றது. விவசாயம் நல்ல நிலையில் பெருக வேண்டும் என்றால் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் எனும் நோக்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்ட விவசாயிகளைச் சந்திக்க வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு எனத் தனித்த சிறப்பு வாய்ந்த இடமாக விளங்குவது டெல்டா பகுதியாகும். கடந்த மே 24-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆறுகள், அணைகளைத் தூர்வாரும் பணியும் மும்மரமாக நடந்துகொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளைக் காண வருகை தருகிறார்.
எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு விவசாயப் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அணைகளும் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், விவசாயத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவசாயிகளிடம் நேரடியாகக் கேட்டு விசாரிக்கும் பொருட்டும் செயலகத்திலிருந்து முதல்வர் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் செயல்திட்டம் என்ன?
- சென்னையிலிருந்து திருச்சிக்கு மாலை வருகை தருகிறார்.
- பின்னர் இரவு வேளாங்கண்ணி சென்று அங்கு தங்குகிறார்.
- மே 31-ஆம் நாள் காலையில் நாகை மாவட்டம் கருவேலங்கடையிலுள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியினைப் பார்வை இருகிறார்.
- பின்னர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடுகிரார்.
- அதன் பின்பு திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
- பின்னர் ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டு அறிகிறார்.
- இறுதியாக, தஞ்சை மாவட்டத்தில் அம்மாப்பேட்டை அருகில் உள்ள கொக்கரி எனும் கிராமத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதன் பின்பு அதற்கேற்றாற்போல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் முதல்வரைச் சந்தித்துத் தங்களிடன் கோரிக்கைகளைத் தெளிவுற வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
3 லட்சம் மானியத்தில் சோலார் மின் இணைப்பு பெறுவது எப்படி?
இனி மலிவான விலையில் யூரியா கிடைக்கும்! எப்படி பெறுவது? விவரம் உள்ளே.!
Share your comments