கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இன்று தொற்று 2000-க்கும் கீழ் சரிந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் புதிதாக 1,675 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன் பின்னர் இந்த கொரோனா உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வேக்சின் பணிகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்த போதிலும், இன்னும் கூட உலகின் பெரும்பாலான நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடிக்கொண்டன.
கடந்த 21ஆம் தேதி பாதிப்பு 2,323 ஆகவும், 22ஆம் தேதி 2,226 ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 2,022 ஆக குறைந்த நிலையில், 3ஆவது நாளாக இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் கீழே சரிந்துள்ளது.
கொரோனாவால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 40,068 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,490 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,635 பேர் குணமாகி உள்ளனர். அதன்படி, இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 737 ஆக உயர்ந்தது. தற்போது 14,841 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுளனர்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள சென்னை ஐஐடியில் இதே போல் அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது, அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தன. கொரோனா குறைந்த பின்னரே, இந்தப் பயணத் தடைகள் மெல்ல நீக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனா இறப்பை அதிகப்படுத்தி உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டதற்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உலக சுகாதார மாநாட்டில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த சில மாதங்களுகு முன்னர் இந்தியாவில் கொரோனாவுக்கு 45 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அறிக்கை வெளியிட்டுருந்தது.
இதற்கு அப்போதே மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தொடர்ந்து கண்டனக் குரலை பதிவு செய்து வருகின்றன. ஏற்கனவே குஜராத்தில் நடைபெற்ற மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களின் 14வது கவுன்சில் மாநாட்டில் இதுகுறித்து பேசியிருந்த மத்திய அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா, இந்தியாவை குறைத்து மதிப்பிடுவதே இந்த அறிக்கையின் நோக்கம் என விமர்சித்திருந்தார். சட்டவிதிமுறைகளை பின்பற்றி முறையாகவும், வெளிப்படையாகவும் கொரோனா இறப்புகளை மாநிலங்கள் பதிவு செய்வதாகவும் கூறி கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் 45 லட்சம் பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து இருக்கலாம் என அறிக்கை வெளியிட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள 23 மாநில சுகாதார அமைச்சர்கள் ஒன்றாக சேர்ந்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்திய அரசு சட்டப்படி, உருவாகிய வலுவான மற்றும் துல்லியமான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தனியார் அமைப்புகளின் துல்லியமற்ற தகவல்களை நம்பக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இருந்தபோதிலும், உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்துறை தொழில்நுட்ப இயக்குனர் வில்லியம், கிடைத்துள்ள தரவுகளின் படி இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் படிக்க:
ஐ.ஐ.டி. சென்னையில் தொற்று நோய்; 32 மாணவர்களுக்கு கொரோனா!
அதிர்ச்சி ரிப்போர்ட்: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் தோல் பூஞ்சை நோய்! கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு!
Share your comments