பருத்தியின் விலை குவிண்டாலுக்கு சுமார் 2000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பருத்தி விவசாயிகல் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் பருத்தி ஏலமானது நடைபெற்று வருகின்றது. இந்த ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர், கொளக்குடி, முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3300 பருத்தி முட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மேலும் படிக்க: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா! கோலாகலக் கொண்டாட்டம்!!
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் உள்ள பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 8699 முதல் ரூ. 10899 வரையிலும், சுரபி ரகப் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 10050 முதல் ரூ.11399 வரையிலும், கொட்டு ரகப் பருத்தி குவிண்டாலுக்கு 3699 ரூபாய் முதல் 8699 ரூபாய் வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டன. ஏலத்தில் 3300 மூட்டைகள் ஒரு கோடியே 10 இலட்ச ரூபாய்க்கு ஏலத்திற்குச் சென்றுள்ளன.
கடந்த வார விலையை விட இந்த வாரம் குவிண்டால் விலை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஆர்.சி.எச் ரகம் குவிண்டால் ரூ.9199 எனவும், சுரபி ரகம் குண்டால் ரூ.8999 எனவும் ஏலம் போன நிலையில் இந்த வாரம் குவிண்டாலுக்கு 2 ஆயிரம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஜீன் மாதம் குவிண்டால் ரூ.13500 எனவும் விற்பனை ஆன நிலையில் விலை வேகமாக மீண்டும் உயர்ந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வாண்டு விளைச்சல் குறைந்து போனாலும் நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
Share your comments