கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ள இச்சமயத்தில் அரசின் சார்பில் கட்டுப்பாடுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஒன்றாக பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பைக் குறித்த முழு தகவலை விரிவாக விளக்குகிறது, இப்பதிவு.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டிப் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்துச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த 2 வாரங்களாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வீடு கட்ட கடன் வாங்கணுமா? அப்போ இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க!
பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிவது பற்றிப் பொதுமக்களிடையே மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பதோடு, சமூக இடைவெளியினைப் பின்பற்றிப் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
தனிநபர் ஒவ்வொரும் கோவிட் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும், கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ!
பம்ப்செட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு: உற்பத்தியாளர்கள் அச்சம்!
Share your comments