1.நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2.சிகரம் தோட்ட தங்கம் விலை!
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை கண்ணாமூச்சு காட்டி வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3.ஸ்ரீவில்லிபுத்தூரில் பூச்சிகள் தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது
தற்போது மாம்பழ சீசன் தொடங்க உள்ள நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு மா மரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்திருந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் சாரல் மழை, பூச்சிகள் தாக்குதல் காரணமாக மரத்தில் பூத்திருந்த பூக்கள் அனைத்தும் கருகி உதிர்ந்து போய் விட்டது. இதனால் மகசூலில் பாதிப்பு ஏற்பட்டது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இவை எல்லாம் மீறி ஒரு சில இடங்களில் மாங்காய் விளைந்தாலும் தத்துப்பூச்சி, அந்து பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றின் தாக்குதலினால் மாங்காய்களுக்கு நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது.
4.இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்படுகின்றன.
பாபநாசம் பகுதியில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்படுகின்றன.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்துக்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீப காலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கால்நடைகளை வயல்களில் அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் கழிவுகள் விவசாய நிலங்களுக்கு இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது. இதற்காக ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள், மாடுகள், வாத்துகள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்துக்காகவும் கொண்டுவரப்பட்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
5.தர்பூசணி விளைச்சல் அதிகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டார பகுதியில்
தர்பூசணி விளைச்சல் அதிகரிப்பு...
கோடைகாலம் தொடங்கிய நிலையில், ஏக்கருக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி.
6. நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன- விவசாயிகள் கவலை
ஈரோடு கோபி பகுதி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க குடோன் வசதி இல்லை. இதனால் ஏராளமான நெல் மூட்டைகள் ரோட்டோரம் வெட்ட வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் புஞ்சைதுறையம்பாளையம், கொண்டையம்பாளையத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
7.பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் ஏப்ரல் மாத இலவச பயிற்சி விவரம்
18.04.2023 மாட்டு சாணத்திலிருந்து மதிப்பு கூட்டல் மற்றும் கலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
19.04.2023 பினாயில் சோப்பு ஆயில் சோப்பு பவுடர் தயாரித்தல்
20.04.2023 இயற்கை முறையில் சிறுதானியங்கள் பயிரிடுதல் தொழில்நுட்பம்
மேலும் தகவல்களுக்கு மேல்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 9488575716
மேலும் படிக்க
எங்களிடம் எதுவும் சொல்லாம.. ஏன் இப்படி? நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்
நிலக்கரி எடுக்கும் முடிவு- வேளாண் அமைச்சர் முதல் விவசாயிகள் வரை அளித்த பதில் என்ன?
Share your comments