மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தியுள்ளதால் சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தங்களது தொழிலைக் கைவிடும் நிலை ஏற்படும் என கோவை பம்ப்செட் உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
தமிழகத்தின் மிகப்பெரும் தொழில் மையங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய கோவையில் பம்ப்செட் உற்பத்தி ஒரு முக்கிய அடையாளமாக விளங்கி வருகிறது. கோவையைப் பொறுத்தவரை விவசாயம், குடிநீர் விநியோகம், வீட்டு உபயோகம், தொழிற்சாலைகள் என அனைத்துக்கும் தேவைகளுக்கான பம்ப்செட்டுகள் உற்பத்தி நடைபெற்று வருகின்றது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
கோவை மாவட்டத்தில் மோட்டார் பம்ப்செட், அவற்றுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி சார்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் நேரடி ஆர்டர் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் என்ற அடிப்படையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், அந்த துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் இருக்கின்றனர்.
மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!
இங்கு அரை ஹெச்.பி. முதல் 50 ஹெச்.பி. வரையுள்ள மோட்டார் பம்ப்செட்டுகள் சிறு, குறு நிறுவனங்களால் தயார் செய்யப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் 500 ஹெச்.பி. வரையிலான பம்ப்செட்டுகளை தயார் செய்கின்றன.
மேலும் படிக்க: பிளாஸ்டிக்கு நாடு முழுதும் தடை! மீறினால் என்ன ஆகும்?
ஏற்கெனவே, மூலப்பொருட்கள் விலை உயர்வால் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் பம்ப்செட் விலை உயர்ந்து, கோவை மாவட்டத்தில் பம்ப்செட் உற்பத்தி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.
இந்நிலையில், பம்ப்செட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு 18 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. இதனால் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் காட்டிலும், சுமார் 40 ஆண்டுகளாக தொழிலில் உள்ள சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் காணாமல் போகக்கூடிய நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!
தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?
Share your comments