தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் பணிக்காக நடத்தப்படும் தேர்வானது வரும் ஜூன் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 4160 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் SI தேர்வு குறித்து வெளிவந்த புதிய தகவலை இப்பதிவு விளக்குகிறது.
SI தேர்வுக்காக காரைக்குடியில் மொத்தமாக ஐந்து இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் 1 துணை காவல் கண்காணிப்பாளர் 20 நபர்களுக்கு கண்காணிப்பாளராக பணியாற்ற உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள SI தேர்வு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டிருக்கிறார். அவர் சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! இன்றைய விலை நிலவரம்!!
தேர்வு எழுதுபவர்களுக்கான விதிமுறைகள்:
- தேர்வு எழுத வருபவர்கள் கருப்புநிற பேனாவைக் கொண்டு தேர்வு எழுத வேண்டும்.
- எலக்ட்ரானிக் சாதனங்கள், கால்குலேட்டர், கைக்கடிகாரங்கள், ப்ளூடூத் ஆகியவைகளைக் கொண்டு வரக்கூடாது.
- தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8:30 மணிக்கு வர வேண்டும்.
- காலை 9.50க்கு மணிக்கு மேல் வந்தால் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க இயலாது.
மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!
இத்தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது நுழைவுச் சீட்டை இணையதளத்தின் வழிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டில் தவறுகள் ஏதும் இருப்பின் தங்களின் ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வந்தால் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!
வரும் ஜூன் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுஅறிவுத் தாளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை தமிழ் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. வழக்கமாகச் சார்பு ஆய்வாளர் தேர்வில் பொதுத் தேர்வுக்கு 70 மதிப்பெண்ணும், உடல்தகுதி தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், சான்றிதழுக்கு 5 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு
இந்த முறை புதிதாகத் தமிழ் தகுதி தேர்வு தனியாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் வெற்றி அடைந்தால் மட்டுமே சார்பு ஆய்வாளர் பணிக்குத் தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது. அதோடு, குறிப்பாகத் தமிழ் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பொது அறிவு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தத்திற்கு எடுக்கப்படும் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! தேர்ச்சி விகதம் எவ்வளவு?
Share your comments