ராஜஸ்தான்,மகாராஷ்டிரா,ஆந்திர தெலுங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெட்ரோல் விலை 100 ரூபாய் அருகில் வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில்,விவசாயம் மற்றும் போக்குவரத்து போன்று முக்கிய அங்கமாக உள்ளது,கொரோனா ஊரடங்கின் போதிலும் அத்தியாவசிய பொருட்களின் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து செயலில் உள்ளது,இதுபோன்ற நிலையிலும் போக்குவரத்துக்கு மூல பொருளான பெட்ரோல்,டீசல் விலையும் பெருமளவில் அதிமாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டாலும் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கலால் வரியை உயர்த்தி கொண்டன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு கச்சா எண்ணெயின் விலை உயர தொடங்கியது,அதன் பிறகு தன நாடு முழுவதும் பெர்டோல், டீசல் விலை உயர தொடங்கியது. இந்த ஒரு ஆண்டில் மட்டுமே பெர்டோல் விலை ரூ.24 மற்றும் டீசல் விலை ரூ.26 உயர்த்தபட்டுள்ளது.மேலும் பெட்ரோல்,துடிச்சால் விலை தினசரோயாக பைசாக் கணக்கில் உயர்த்தப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் நேற்று பெர்டோளுக்கு 22 பைசாவும்,டீசலுக்கு 24 பைசாவும் விலை உயர்த்தப்பட்டு சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர்க்கு ரூ.96.42 ஆகவும்,டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.91.15 ஆகவும் விற்கப்பட்டது.இதேபோன்று சேலத்தில் நேற்று பெட்ரோல் ரூ.97.36கும் டீசல் ரூ.91.60கும் விற்கப்படுகிறது.
மும்பையில் கடந்த 1ஆம் தேதி பெர்டோல் விளைவு 100ஐ தாண்டியது,மும்பை தவிர தானே,நவிமும்பையிலும் பெட்ரோல் விலை 100ஐ தாண்டியது.நேற்று மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102ஐ நெருங்கியது,தமிழநாட்டின் கடலூர் பகுதியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர்க்கு ரூ.98.88க்கும் டீசல் விலை ஒரு லிட்டர்க்கு ரூ.93.02க்கும் விற்கப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்களும்,வாகன பிரியர்களுக்கு,சரக்கு வாகனம் ஓட்டுநர்களும் கவலைக்கு ஆளாகிறார்கள்.இதேபோல் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்தால்,அத்தியாவசிய பொருட்களின் விளையும் அதிகரிக்கும் என்ற யூகமும் உள்ளது.
மேலும் படிக்க:
ரூ.800 மதிப்புள்ள LPG சிலிண்டரை வெறும் 9 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!
விவசாய அதிகாரி ஆக ஆசையா? வந்துவிட்டது உங்களுக்கான வேலை அறிவிப்பு:
திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! கரூர் பெட்ரோல் பங்கின் சூப்பர் அறிவிப்பு!
Share your comments