1. செய்திகள்

பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்! நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!!

Poonguzhali R
Poonguzhali R
Rs.1000 scheme for women! Tamil Nadu government released the Guidelines!!

தமிழகப் பெண்களுக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கத் தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவிலான குழு அமைக்கப்படும்.

பெண் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான 43 பக்க விரிவான வழிகாட்டுதலை மாநில அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும்.

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவிலான குழு அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மாவட்ட அளவில், பயனாளிகள் அடையாளம் காணுதல், முகாம்கள் நடத்துதல், விண்ணப்பங்கள் பதிவு செய்தல் மற்றும் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்களை அகற்றுதல் போன்ற பணிகளை மாவட்ட அளவிலான, தாலுகா அளவிலான அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

பெருநகரச் சென்னை மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி கமிஷனர் பணிகளை மேற்கொள்வார். படிவங்கள் பதிவு செய்யப்படும் முகாமிற்கு பயனாளிகள் மட்டுமே விண்ணப்பத்தை கொண்டு வர வேண்டும் என்றும், விண்ணப்பங்களைச் சேகரிப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

அறிவுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகுத் தண்டு காயம் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ், தசைச் சிதைவு மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் பராமரிப்பு உதவித்தொகை பெறுபவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 சிறப்பு  முகாம்கள்: இதற்கிடையில், வருவாய்த் துறையினர், அனைத்து ஆட்சியர்களுக்கும் தகவல் அளித்து, பல்வேறு திட்டங்களின் கீழ் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா பெற 100 இடங்களில் சிறப்பு  முகாம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படும் என்றும் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில், கலெக்டர்கள் பயனாளிகளைக் கண்டறிந்து, முகாம்களை நடத்தி, விண்ணப்பங்களைப் பதிவு செய்து, தீர்வு செய்வதை உறுதி செய்வார்கள் எனவும் பெருநகரச் சென்னை மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி கமிஷனர் பணிகளை மேற்கொள்வார் எனவும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

Tamil Scheme: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் கற்க புதிய திட்டம்!

தக்காளி, வெங்காயம் விலை ஏற்ற விவகாரம்! வரப்போகிறதா நடமாடும் காய்கறி கடை!!

English Summary: Rs.1000 scheme for women! Tamil Nadu government released the Guidelines!! Published on: 12 July 2023, 12:28 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.