ஜல்லிக்கட்டுக்கு தமிழக கிராமங்கள் தயாராகின்றன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட RT-PCR நெகட்டிவ் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு காளைகளை அடக்குபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழக கிராமங்கள் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகின்றன.
எவ்வாறாயினும், காளைகளை அடக்குபவர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக எடுக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
காளை அடக்குபவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட RT-PCR நெகட்டிவ் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் கிராமங்களில் மிகப்பெரிய விளையாட்டாகும், இது அறுவடை காலத்திற்குப் பிறகு நடத்தப்படுகிறது.வெற்றி பெறும் காளை, அதன் உரிமையாளர் மற்றும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அந்தந்த கிராமங்களில் ஆடம்பரமாக விழா கொண்டாடப்படும்.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு போன்ற ஜல்லிக்கட்டு ஹாட் ஸ்பாட் பகுதிகளுக்கு வெகு தொலைவில் உள்ள மக்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் காண வருகின்றனர்.
தற்பொழுது, ஜல்லிக்கட்டு விளையாடவிருக்கும் மாடுகளுக்கு கால்நடைத்துறையின் சார்பில் உடல் தகுதி சான்றிதழ் வழங்கும் வேலை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் இன்று துவங்கப்பட்டது. அவனியாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு ஜல்லிக்கட்டில் விளையாடும் காளைகளுடன் உரிமையாளர்கள் வந்து பரிசோதனை செய்கின்றனர். அங்குள்ள மருத்துவர்கள் காளை உரிமையாளரின் புகைப்படம் மற்றும் காளைகளின் இரு கொம்புகளுக்கு இடையே உள்ள அளவு, பற்களின் எண்ணிக்கை, மாட்டின் வயது மற்றும் உயரம், காளைகளுக்கு ஏதேனும் காயம் உள்ளதா உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து மருத்துவர்கள் காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
ஒருபுறம் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் கிராம மக்கள் தயார்படுத்தி வரும் நிலையில், இப்பொழுது மாட்டு உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில், தங்களது காளைகளை தயார் செய்து உடற்தகுதி சான்றிதழ் பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் வழியாக முன்பதிவு நடைபெறும் என துரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்திருந்தார். மதுரை மாவட்டத்தில் ஜல்லிகட்டு நடத்துவது தொடர்பாக நாளை விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்வதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்
Share your comments