புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தமிழ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூரின் வளர்ச்சியும் பிற மாநில தொழிலாளர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தத் திட்டத்தைத் தொடங்க திருப்பூர் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை கற்கும் வாய்ப்பினை வழங்கும் வகையில், திருப்பூர் ஆத்துபாளையம் நடுநிலைப்பள்ளியில் ‘தமிழ்மொழி கற்போம்’ என்ற திட்டத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தமிழ் திட்டம் தொடக்க விழாவில் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “திருப்பூரின் வளர்ச்சியானது பிற மாநில தொழிலாளர்களுடன் இணைந்திருப்பதால், இந்தத் திட்டத்தைத் தொடங்க திருப்பூர் நகரத்தைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களை எங்கள் சகோதரர்களாகவே கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பது என்பது குடும்பத்தில் ஒரு அங்கமாக மாற்றும். முதற்கட்டமாக 260 குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதோடு, இத்திட்டம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டு ரூ.71.1 லட்சம் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, கோவையில் உள்ள நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நம்ம ஊரு பள்ளி திட்டம் குறித்து அமைச்சர் குறிப்பிடுகையில், “7,294 அரசு பள்ளிகள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளன என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த தமிழ்மொழி கற்போம் எனும் தமிழ் திட்டமானது பெரும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்
டெல்லியை தொடர்ந்து தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
Share your comments