தமிழகத்தில் சிறு, குறு நடுத்தரத் தொழில்களுக்கான கடன் மேளா தொடக்கம்!
தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு குறு நடுத்தர தொழில்களுக்குக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 16 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இது வரும் ஆகஸ்டு 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படக் கூடிய இந்த கடன் மேளாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரிவுபடுத்துவதற்கும் உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
70 ஆயிரம் கோடியைத் தாண்டிய திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள டாப்லைட் வளாகத்தில் பின்னலாடை எந்திரக் கண்காட்சி நடந்து வருகின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 5 ஆயிரம் கோடியாக இருந்த பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி, தற்பொழுது 70 ஆயிரம் கோடியாக உச்சத்தினை எட்டியுள்ளது என இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜாசண்முகம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க: இந்த 5 ரூபாய் இருக்கா? இந்தாங்க பிடிங்க ரூ. 2 லட்சம்!
தரமான விதைகள் விற்பனை: வேளாண் அதிகாரி அறுவுறுத்தல்
விவசாயிகளுக்கு, பருவத்திற்கு ஏற்ற தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும், என விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை சார்பில் விதை விற்பனையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நாமக்கல் பகுதி உடுமலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உடுமலை, பொள்ளாச்சி பகுதி விதை விற்பனையாளர்கள், விதை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை, அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையத்தில் வாங்குவதற்கு ஏதுவாக, விதை விபரங்கள், விதை இருப்பு, விற்பனை விபரங்கள் முதலியவற்றை உழவர் செயலியில் பதிவேற்றம் செய்து பெற்றுக்கொள்ளுமாறு, விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மீன் ஏற்றுமதியில் இந்தியா கலக்கல்
பேக்கிரிப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேக்கரிப் பொருட்கள் எனறழைக்கப்படும் அடுமனைப் பொருட்களான ரொட்டி, கேக் மற்றும் பிஸ்கட் வகைகள் தயாரிப்பது பற்றிய 2 நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி வரும் ஆகஸ்டு 16, 17 ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதனைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொள்ளிடம் பாலத்தினை இடிக்க வேண்டாம்: கோரிக்கை வைக்கும் மக்கள்!
திருச்சியில் வெள்ளப்பெருக்கால் சிறிது, சிறிதாக இடியும் கொள்ளிடம் இரும்பு பாலம் முற்றிலுமாக இடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்த பாலத்தை அதன் பழமைத்துவம் மாறாமல் புதுப்பித்துக்கொடுத்தால் வரும் காலங்களில் அது திருச்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடிய சின்னமாக இருக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க
Share your comments