வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ரூ.68.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
கோவை வேளாண் பல்கலைக்கழக புதிதாக திசு வளர்ப்பு கூடம், மூன்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் மையங்களும் முதல்வர் திறந்து வைத்த கட்டிடங்களின் பட்டியலில் அடங்கும். அவற்றின் முழு விவரம் பின்வருமாறு-
திசு வளர்ப்பு ஆய்வுக்கூடம்:
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் திசு வளர்ப்பு ஆய்வுக்கூடம், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 21 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கல்விக்கான கட்டமைப்பு வசதிகள் 6 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி வசதி மையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 21 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கல்விக்கான கட்டமைப்பு வசதிகள், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சி மையம் மற்றும் விருந்தினர் மாளிகை;
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்:
தற்போது வரை 193 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம்- அரூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆகிய இடங்களில் 6 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்;
மதுரை மாவட்டம், விநாயகபுரத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் நீர் மேலாண்மை பயிற்சிக்கூடம் மற்றும் அலுவலகக் கட்டடம்;
கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் வட்டாரம், புதுப்பேட்டை மற்றும் திருமுட்டம் வட்டாரம், காவனூர் ஆகிய இடங்களில் 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்;
முதன்மை பதப்படுத்தும் மையங்கள்:
ஈரோடு மாவட்டம் ஆலுக்குளி, திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், ஆரணி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் 25 கோடியே 62 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதன்மை காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் மையங்கள்;
தமிழ்நாடு நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கும் திட்ட நிதியிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு;
தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய நிதியிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியூர், விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு, தஞ்சாவூர் மாவட்டம் தென்னூர், திருவாரூர் மாவட்டம் பெருந்தரகுடி ஆகிய இடங்களில் 3 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு வசதியுடன் கூடிய துணை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள்;
சேமிப்புக் கிடங்குகள்:
நபார்டு கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டம், மேலநத்தம் கிராமத்தில் 1000 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு, நீடாமங்கலம் வட்டம், காளாஞ்சிமேடு கிராமத்தில் 2000 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு, வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 500 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு;
என மொத்தம் 68 கோடியே 82 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
pic courtesy: TNDIPR
மேலும் காண்க:
2022-23 ஆம் ஆண்டில் தோட்டக்கலை சாகுபடி ரிப்போர்ட்- ஒன்றிய அரசு வெளியீடு
Share your comments