
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனமானது அதன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் தீர்வுகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதையடுத்து, குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. ‘மாகெல் தியாலா சௌர் க்ருஷி பம்ப் (MTSKP)’ திட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக அமைப்பான (MSEDCL) நிறுவனத்திற்கு ₹754 கோடி மதிப்பிலான 25,000 சோலார் பம்பிங் சிஸ்டம்களை வழங்குவதற்காக அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பெற்றுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் - புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் தீர்வுகளுக்கு மக்கள் மாறுவதை ஊக்குவிப்பது, மகாராஷ்டிரா மாநில விவசாயத் துறைக்கு ஊக்கமளிப்பது, மற்றும் பசுமையான, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை வாய்ந்த ஒரு எதிர்காலத்தினை உருவாக்குவது என பல்வேறு இலக்குகளை நனவாக்குவதில் முக்கியப் பங்களிக்க சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் முனைப்புடன் தயாராகியுள்ளது.
வேகமெடுக்கும் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் தேவை:
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை குறித்து பேசிய சி.ஆர்.ஐ. குழுமத்தின் தலைவர்
G.சௌந்தரராஜன்,“சோலார் பம்பிங் சிஸ்டம்களை வழங்க MSEDCL அமைப்பால் சி.ஆர்.ஐ. தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். நம்பகமான, மின்னாற்றலை சேமிக்கக் கூடிய மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த பம்பிங் தீர்வுகளை புதுமையாகவும், தலைசிறந்த தரத்துடனும் உருவாக்குவதில் சி.ஆர்.ஐ. நிறுவனம் அயராத அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது இதன் பலனாகவே இந்த கணிசமான எண்ணிக்கையிலான ஆர்டர் எங்களுக்குக் கிடைத்துள்ளது."
"எங்களது ஆற்றல்மிக்க செயலாக்க திறன்கள், மிகுதியான தொழில்துறை நிபுணத்துவம், மற்றும் பல்வேறு நகரங்களில் உள்ள எங்களது விரிவான நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம், இந்த ஆர்டருக்கான சிஸ்டம்களை தடையின்றி விநியோகிப்பதையும், சீராக நிறுவுவதையும் நாங்கள் உறுதிசெய்துள்ளோம். புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை நோக்கிய மாற்றம் உலகளவில் வேகமெடுத்து வருகிறது; எனவே சுற்றுச்சூழலை பொறுப்புடன் அமைப்பதற்கும், இனிவரும் தலைமுறையினருக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அவசியமான சோலார் பம்பிங் சிஸ்டம்களை வழங்குவதில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் முனைப்புடன் செயலாற்றி வருகிறது”, என்று தெரிவித்தார்.
1,70,000-க்கும் மேற்பட்ட சோலார் பம்பிங் சிஸ்டம்கள் மற்றும் IoT-செயலாக்கப்பட்ட ஸ்மார்ட் பம்புகளை வெற்றிகரமாக நிறுவியதின் மூலம், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனமானது நிலையான கண்டுபிடிப்புகளில் புதிய தரநிலைகளை தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது.
அதன் மேம்பட்ட பம்பிங் தொழில்நுட்பங்கள் மூலம், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுமார் 5,200 மில்லியன் யூனிட் kWh மின்சாரத்தை சேமிப்பதிலும், 4.13 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு (CO2) மாசுவை குறைப்பதிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை எட்டியுள்ளது; இது மின்னாற்றலை மிச்சப்படுத்துவது, மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பேணுவது ஆகியவற்றில் சி.ஆர்.ஐ.-யின் மிகுதியான பங்களிப்பிற்கு நற்சான்றாக விளங்குகிறது.
சி.ஆர்.ஐ. நிறுவனம் குறித்த விவரங்கள்
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அதன் இருப்பைக் கொண்டுள்ள சி.ஆர்.ஐ. நிறுவனம், திரவ மேலாண்மை (ஃப்ளூயிட் மேனேஜ்மெண்ட்) தீர்வுகளை வழங்குவதில் உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுள் முன்னணியில் உள்ளது. பம்புகள், மோட்டார்கள், IoT டிரைவ்ஸ் & கண்ட்ரோலர்கள், சோலார் பம்பிங் சிஸ்டம்கள், பைப்புகள், வயர்கள் மற்றும் கேபிள்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை சி.ஆர்.ஐ. நிறுவனம் வழங்கி வருகிறது.
9,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உள்ளடக்கிய ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த போர்ட்ஃபோலியோவுடன், 100% ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பம்புகளை தயாரிக்கும் உலகின் வெகு சில உற்பத்தியாளர்கள் மத்தியில் சிறந்த நிறுவனமாக சி.ஆர்.ஐ. தனித்து உயர்ந்துள்ளது.
120 நாடுகளில் உள்ள அதன் 30,000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், மற்றும் உலகம் முழுவதுமுள்ள அதன் 1,500 சர்வீஸ் சென்டர்களின் ஆதரவுடன், சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் தயாரிப்புகள் அணுகக்கூடிய வகையில் கிடைக்கின்றன.
Read also: பயிர் விளைச்சலை 50% அதிகரிக்கும் பாக்டீரியா- ஐஐடி பம்பாய் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்
அறுபது வருட உற்பத்தி அனுபவத்துடன், பம்பிங் தொழிற்துறையில் சி.ஆர்.ஐ. ஒரு நம்பகமான பிராண்ட் என்ற நற்பெயரை ஈன்றுள்ளது. "ஃப்ளூடின் அட்வான்ஸ்டு டெக்னாலஜி சென்டர்" என்று அழைக்கப்படும் இந்நிறுவனத்தின் அதிநவீன உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவானது, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சி.ஆர்.ஐ. நிறுவனமானது அதன் ஆற்றல்மிக்க உற்பத்தி திறனுடன் சேர்த்து, பெருமைக்குரிய இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் கவுன்சிலின் (EEPC) விருதை 20 முறையும், இந்திய அரசிடமிருந்து தேசிய எரிசக்தி சேமிப்பிற்கான (NEC) விருதை 8 முறையும் வென்றுள்ளது.
நீர் & கழிவுநீர், சோலார், புராசஸ் தொழிற்சாலைகள், கழிவுநீர் & சுத்திகரிப்பு ஆலைகள், HVAC, தீயணைப்பு, உலோகம் & சுரங்கம், உணவு & பானங்கள், விவசாயம் & குடியிருப்பு போன்ற பல்வேறு தொழில்துறைகளின் தேவைகளை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பூர்த்தி செய்கின்றது.
Read more:
நெல்லை உலர வைப்பதில் சிரமம்: ஈரப்பதம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை
தினை வகைகளில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல்- சென்னையில் 4 நாள் பயிற்சி
Share your comments