தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1 முதல் இன்று அதிகாலை வரை இயல்பை விட 28 மி.மீ மழை அதிகமாக பெய்துள்ள நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் BASL மணம்பூண்டிபகுதியில் அதிகப்பட்சமாக 27 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் RSCI-2 சூரப்பட்டில் 21 செ.மீ, BASL-முகையூரில் 20 செ.மீ, RSCI-2 கேதார் பகுதியில் 15 செ.மீ என தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
அதே சமயம் தமிழ்நாட்டில் நேற்று ஈரோட்டில் அதிகப்பட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், நீலகிரி உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
13.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.07.2023 முதல் 19.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
pic courtesy: india.com
மேலும் காண்க:
TNPSC Group- IV தேர்வில் வென்றவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
Share your comments