தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 42% ஆக உயரும்.
அகவிலைப்படி உயர்வு (DA hike)
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7- வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த மாதம் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது இதனை எடுத்து மத்திய அரசு ஊழியர்களின் கவிதை படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைபடியை 4 % உயர்த்தி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு (Tamilnadu)
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 3% வெயிட்டேஜ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்தாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களை போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் மொத்தம் 42% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!
இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!
Share your comments