1. மற்றவை

2000 ஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேகம்!

Poonguzhali R
Poonguzhali R
2000-year-old temple Kumbabhishekam!

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் வரகுணேஸ்வரர் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக விழா 150 ஆண்டுகளுக்குப் பின்பு வெகு சிறப்பாக நடைபெற்று உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

சாலை கிராமத்தில் வரகுணப் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைத் தன்மை வாய்ந்த வரகுணேஸ்வரர் ஆலயம் இருக்கின்றது. இந்த பழமை வாய்ந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுக் கடந்த சில் ஆண்டுகளாகத் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. தற்போது, பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்ற செப்டம்பர் 5-ஆம் நாள் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இன்று காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூசைகள் தொடங்கி நடந்தன. காலை 9 மணிக்குக் கடம் புறப்பாடு நடந்தது. 10 மணியளவில் ராஜேந்திரக் குருக்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ராமநாதபுர சமஸ்தான பரம்பரை அறங்காவலர் பிரம்ம கிருஷ்ணராஜேஸ்வரி நாச்சியார். நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் முதலானோர் செய்திருந்தனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் கும்பாபிஷேகத்திற்கு நகர் முழுவதும் ப்ளக்ஸ்பேனர் வைத்து வரவேற்பளித்தனர். கும்பாபிஷேகம் முடிந்து வந்த பக்தர்களுக்கு மோர் மற்றும் தண்ணீர், சர்பத் ஆகியவற்றை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தமிழகத்தில் டாடா நிறுவனம் ரூ. 5,000 கோடி முதலீடு!

புதிய தொழில் தொடங்க 17.50 லட்சம் கடன் அரசு அறிவிப்பு!

English Summary: 2000-year-old temple Kumbabhishekam! Published on: 09 September 2022, 02:30 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.